தொடக்கம் | ||
பிறப்பு
|
||
74. | நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத்திரள் உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று இதழ் நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே |
உரை |
75. | அவ்வழி, ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை |
உரை |
76. | அவற்றுள், முயற்சியுள் அ ஆ அங்காப்பு உடைய |
உரை |
77. | இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு அண் பல் முதல் நா விளிம்பு உற வருமே |
உரை |
78. | உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே | உரை |
79. | கஙவும் சஞவும் டணவும் முதலிடை நுனி நா அண்ணம் உற முறை வருமே |
உரை |
80. | அண்பல் அடிநா முடியுறத் தநவரும் | உரை |
81. | மீகீழ் இதழுறப் பம பிறக்கும் | உரை |
82. | அடிநா அடியணம் உற ய தோன்றும் | உரை |
83. | அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் | உரை |
84. | அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நா விளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகாரம் ளகாரம் ஆய் இரண்டும் பிறக்கும் |
உரை |
85. | மேல்பல் இதழுற மேவிடும் வவ்வே | உரை |
86. | அண்ணம் நுனிநா நனியுறின் றன வரும் | உரை |
87. | ஆய்தக்கு இடம் தலை அங்கா முயற்சி சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய |
உரை |
88. | எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின் திரிபும் தத்தமின் சிறிதுள ஆகும் |
உரை |
89. | புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும் ஏனை உயிரோடு உருவு திரிந்தும் உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின் பெயரொடும் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் |
உரை |
90. | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே |
உரை |
91. | இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே |
உரை |
92. | ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் அளபு ஆம் குறில் இணை குறில்கீழ் இடை கடைமிகலே அவற்றின் குறியாம் வேறே |
உரை |
93. | யகரம் வரக் குறள் உத்திரி இகரமும் அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய |
உரை |
94. | நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம் அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே |
உரை |
95. | தற்சுட்டு அளபுஒழி ஐ மூ வழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும் |
உரை |
96. | ண ன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும் | உரை |
97. | ல ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் | உரை |