இடைநிலை மயக்கம்
 
110. க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ்விரு பால் மயக்கும் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே
உரை
   
111. ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே உரை
   
112. ஞநமுன் தம் இனம் யகரமொடு ஆகும் உரை
   
113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் உரை
   
114. ணனமுன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் உரை
   
115. மம்முன் ப ய வ மயங்கும் என்ப உரை
   
116. ய ர ழ முன்னர் மொழிமுதல் மெய்வரும் உரை
   
117. லளமுன் கசப வ ய ஒன்றும்மே உரை
   
118. ரழ அல்லன தம்முன் தாம் உடன் நிலையும் உரை
   
119. ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம
ஈர் ஒற்றாம் ர ழ தனிக் குறில் அணையா
உரை
   
120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்து ஈர் ஒற்றாம் செய்யுள் உள்ளே
உரை
   
121. தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப
உரை