தொடக்கம் | ||
இடைநிலை
|
||
141. | இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை வினைப்பெயர் அல் பெயர்க்கு இடைநிலை எனலே |
உரை |
142. | த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை |
உரை |
143. | ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை |
உரை |
144. | ப வ மூ இடத்து ஐம்பால் எதிர்பொழுது இசை வினை இடைநிலையாம் இவை சில இல |
உரை |
145. | றவ்வொடு உகர உம்மை நிகழ்பு அல்லவும் தவ்வொடு இறப்பும் எதிர்வும் டவ்வொடு கழிவும் கவ்வோடு எதிர்வும் மின் ஏவல் வியங்கோள் இ மார் எதிர்வும் ப அந்தம் செலவொடு வரவும் செய்யும் நிகழ்பு எதிர்வும் எதிர்மறை மும்மையும் ஏற்கும் ஈங்கே |
உரை |