அகர வீற்றுச் சிறப்புவிதி
 
167. செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபே
அஃறிணைப் பன்மை அம்ம முன் இயல்பே
உரை
   
168. வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே
உரை
   
169. சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதலும் விதி உரை
   
170. பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற
உரை