தொடக்கம் | ||
குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி
|
||
181. | வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி | உரை |
182. | இடைத்தொடர் ஆய்தத்தொடர் ஒற்று இடையின் மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை |
உரை |
183. | நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே |
உரை |
184. | மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில் தம் இன வன்தொடர் ஆகா மன்னே |
உரை |
185. | ஐ ஈற்று உடைக் குற்றுகரமும் உளவே | உரை |
186. | திசையொடு திசையும் பிறவும் சேரின் நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் ஆம் பிற |
உரை |
187. | தெங்குநீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் | உரை |
188. | எண் நிறை அளவும் பிறவும் எய்தின் ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள் முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின் ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் |
உரை |
189. | ஒன்றன் புள்ளி ரகரம் ஆக இரண்டன் ஒற்று உயிர் ஏக உவ் வருமே |
உரை |
190. | மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும் | உரை |
191. | நான்கன் மெய்யே ல ற ஆகும்மே | உரை |
192. | ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும் | உரை |
193. | எட்டன் உடம்பு ண ஆகும் என்ப | உரை |
194. | ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் முன்னதின் ஏனைய முரணி ஒவ்வொடு தகரம் நிறீஇப் பஃது அகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே |
உரை |
195. | முதல் இரு நான்காம் எண் முனர்ப் பத்தின் இடைஒற்று ஏகல் ஆய்தம் ஆகல் என இரு விதியும் ஏற்கும் என்ப |
உரை |
196. | ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் எண்ணும் அவை ஊர் பிறவும் எய்தின் ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் தவ்வே |
உரை |
197. | ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி எண் நிறை அளவும் பிறவரின் பத்தின் ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும் ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே |
உரை |
198. | இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய் கரந்திட ஒற்று ன ஆகும் என்ப |
உரை |
199. | ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் முன்னதின் முன் அல ஓட உயிர்வரின் வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல்நெறி |
உரை |