ணகர னகரவீறு
 
209. ண ன வல்லினம் வர ட றவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்து மெய்வரினும் இயல்பு ஆகும்
உரை
   
210. குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே
உரை
   
211. சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற
டவ்வாகலும் ஆம் அல்வழி யும்மே
உரை
   
212. னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான்
அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே
உரை
   
213. மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே உரை
   
214. தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி
உரை
   
215. மரம் அல் எகின் மொழி இயல்பும் அகரம்
மருவ வலிமெலி மிகலும் ஆகும்
உரை
   
216. குயின் ஊன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே உரை
   
217. மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அவ்வேற்று மென்மையோடு உறழும்
உரை
   
218. தன் என் என்பவற்று ஈற்று னவ் வன்மையோடு
உறழும் நின் ஈறு இயல்பாம் உறவே
உரை