உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
 
245. எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறுமே
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்
உரை
   
246. எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை
தள்ளி நிரலே தம் நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே
உரை
   
247. தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டல
உரை
   
248. ஆ மா கோ னவ்வணையவும் பெறுமே உரை
   
249. ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் பவ்வொற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே
உரை
   
250. வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே உரை
   
251. சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடுமே உரை
   
252. அத்தின் அகரம் அகர முனை இல்லை உரை