தொடக்கம் | ||
சொல்லின் பொதுவிலக்கணம்
|
||
259. | ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும் மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே |
உரை |
260. | ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி பல பொருளன பொது இருமையும் ஏற்பன |
உரை |
261. | மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை |
உரை |
262. | ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை | உரை |
263. | ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை | உரை |
264. | பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால் ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும் |
உரை |
265. | படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின் பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை இடத்து அவற்று ஒருமைப் பன்மைப் பாலே |
உரை |
266. | தன்மை முன்னிலை படர்க்கை மூ இடனே | உரை |
267. | இலக்கணம் உடையது இலக்கணப் போலி மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும் இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனும் முத் தகுதியோடு ஆறாம் வழக்கு இயல் |
உரை |
268. | பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் |
உரை |
269. | ஒன்று ஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பே முதல் தொகை குறிப்போடு இன்ன பிறவும் குறிப்பின் தருமொழி அல்லன வெளிப்படை |
உரை |