தொடக்கம் | ||
பெயர்ச் சொல்
|
||
275. | இடுகுறி காரணம் மரபோடு ஆக்கம் தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே |
உரை |
276. | அவற்றுள், கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம் ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு இருது மதி நாள் ஆதிக் காலம் தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பு ஆதிப் பல் குணம் ஓதல் ஈதல் ஆதிப் பல் வினை இவை அடை சுட்டு வினா பிற மற்றோடு உற்ற னவ்வீறு நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப |
உரை |
277. | கிளைமுதல் ஆகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோடு இன்னன பெண்பால் பெயரே |
உரை |
278. | கிளந்த கிளைமுதல் உற்ற ரவ்வீற்றவும் கள் என் ஈற்றின் ஏற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி ஆகும் |
உரை |
279. | வினாச் சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள் ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம் ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே |
உரை |
280. | முன்னர் அவ்வொடு வரு வை அவ்வும் சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும் ஒன்று அல் எண்ணும் உள்ள இல்ல பல்ல சில்ல உள இல பல சில இன்னவும் பலவின் பெயர் ஆகுமே |
உரை |
281. | பால் பகா அஃறிணைப் பெயர்கள் பால் பொதுமைய | உரை |
282. | முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும் சினைமுதற்பெயர் ஒரு நான்கும் முறை இரண்டும் தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும் எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர் |
உரை |
283. | ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் ஆம் அந்நான்மைகள் ஆண்பெண் முறைப்பெயர் |
உரை |
284. | அவற்றுள், ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும் |
உரை |
285. | தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது |
உரை |
286. | வினையின் பெயரே படர்க்கை வினையால் அணையும் பெயரே யாண்டும் ஆகும் |
உரை |
287. | தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம் யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் |
உரை |
288. | ஒருவன் ஒருத்தி பெயர்மேல் எண் இல | உரை |
289. | ஒருவர் என்பது உயர் இரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப |
உரை |
290. | பொருள்முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத் தொல்முறை உரைப்பன ஆகு பெயரே |
உரை |