தொடக்கம் | ||
வேற்றுமை
|
||
291. | ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை |
உரை |
292. | பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை |
உரை |
293. | ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே | உரை |
294. | நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா | உரை |
295. | அவற்றுள், எழுவாய் உருபு திரிபு இல் பெயரே வினைபெயர் வினாக்கொளல் அதன் பயனிலையே |
உரை |
296. | இரண்டாவதன் உருபு ஐயே அதன்பொருள் ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல் ஒத்தல் உடைமை ஆதி ஆகும் |
உரை |
297. | மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள் |
உரை |
298. | நான்கா வதற்கு உருபு ஆகும் குவ்வே கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல் பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே |
உரை |
299. | ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும் நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே |
உரை |
300. | ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கமாம் தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே |
உரை |
301. | ஏழன் உருபு கண் ஆதி ஆகும் பொருள்முதல் ஆறும் ஓர் இரு கிழமையின் இடனாய் நிற்றல் இதன்பொருள் என்ப |
உரை |
302. | கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின் முன்சார் வலம் இடம் மேல்கீழ் புடைமுதல் பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே |
உரை |
303. | எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின் திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல் திரிபுமாம் பொருள் படர்க்கை யோரைத் தன்முகம் ஆகத் தான் அழைப்பதுவே |
உரை |
304. | இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல யவ்வீற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர் ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன |
உரை |
305. | இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும் இகர நீட்சியும் உருபாம் மன்னே |
உரை |
306. | ஐ இறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும் உருபாம் அல்லவற்று ஆயும் ஆகும் |
உரை |
307. | ஒருசார் னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதனோடு ஈறு போதல் அவற்றோடு ஓ உறல் ஈறு அழிந்து ஓ உறல் இறுதி யவ்வாதல் அதனோடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து அயல் ஏ ஆதலும் விளி உருபு ஆகும் |
உரை |
308. | ளஃகான் உயர் பெயர்க்கு அளபு ஈறு அழிவு அயல் நீட்சி இறுதி யவ்வொற்று ஆதல் அயலில் அகரம் ஏ ஆதலும் விளித்தனு |
உரை |
309. | ரவ்வீற்று உயர் பெயர்க்கு அளபு எழல் ஈற்று அயல் அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ ஈ ஆதல் அதனோடு ஏ உறல் ஈற்று ஏ மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல் ஈற்றின் ஈர் உறல் இவையும் ஈண்டு உருபே |
உரை |
310. | லகார ஈற்று உயர்பெயர்க்கு அளபு அயல் நீட்சியும் யகார ஈற்றிற்கு அளபுமாம் உருபே |
உரை |
311. | னவ்வீற்று உயர்திணை அல் இரு பெயர்க்கண் இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி |
உரை |
312. | ல ள ஈற்று அஃறிணைப் பெயர் பொதுப் பெயர்க்கண் ஈற்று அயல் நீட்சியும் உருபு ஆகுமே |
உரை |
313. | அண்மையின் இயல்பும் ஈறு அழிவும் சேய்மையின் அளபும் புலம்பின் ஓவும் ஆகும் |
உரை |
314. | நுவ்வொடு வினாச்சுட்டு உற்ற ன ள ர வை து தாம் தான் இன்னன விளியா |
உரை |
315. | முதலை ஐ உறின் சினையைக் கண் உறும் அது முதற்கு ஆயின் சினைக்கு ஐ ஆகும் |
உரை |
316. | முதல் இவை சினை இவை என வேறு உள இல உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும் |
உரை |
317. | யாதன் உருபின் கூறிற்று ஆயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும் |
உரை |
318. | ஐ ஆன் கு செய்யுட்கு அவ்வும் ஆகும் ஆகா அஃறிணைக்கு ஆன் அல்லாதன |
உரை |
319. | எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளும் நான்கு ஏழ் இருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர் |
உரை |