தொடக்கம் | ||
முற்று வினை
|
||
323. | பொது இயல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர் முதல் அறு பெயர் அலது ஏற்பில முற்றே |
உரை |
324. | ஒருவன்முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும் ஒருமை பன்மையைத் தன்மை முன்னிலையினும் முக்கா லத்தினும் முரண முறையே மூ ஐந்து இரு மூன்று ஆறாய் முற்று வினைப்பதம் ஒன்றே மூ ஒன்பான் ஆம் |
உரை |
325. | அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை | உரை |
326. | அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை | உரை |
327. | அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே |
உரை |
328. | து று டு குற்றிய லுகர ஈற்ற ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும் |
உரை |
329. | அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை ஆவே எதிர்மறைக் கண்ணது ஆகும் |
உரை |
330. | தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை உண்டு ஈர் எச்சம் இருதிணைப் பொதுவினை |
உரை |
331. | கு டு து று என்னும் குன்றிய லுகரமோடு அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை |
உரை |
332. | அம் ஆம் என்பன முன்னிலை யாரையும் எம் ஏம் ஓம் இவை படர்க்கை யாரையும் உம் ஊர் க ட த ற இருபா லாரையும் தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை |
உரை |
333. | செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும் வினையொடு முடியினும் விளம்பிய முற்றே |
உரை |
334. | முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை | உரை |
335. | ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும் ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும் முப்பால் ஒருமை முன்னிலை மொழியே |
உரை |
336. | முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந்நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே |
உரை |
337. | இர் ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப் பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல் |
உரை |
338. | கயவொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள் இயலும் இடம்பால் எங்கும் என்ப |
உரை |
339. | வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன | உரை |