| தொடக்கம் | ||
| தொகைநிலைத் தொடர்மொழி
|
||
| 361. | பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் |
உரை |
| 362. | வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை அன்மொழி என அத்தொகை ஆறு ஆகும் |
உரை |
| 363. | இரண்டு முதலாம் இடை ஆறு உருபும் வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே |
உரை |
| 364. | காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை | உரை |
| 365. | பண்பை விளக்கும் மொழிதொக் கனவும் ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை |
உரை |
| 366. | உவம உருபு இலது உவமத் தொகையே | உரை |
| 367. | போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபே |
உரை |
| 368. | எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனும் நான்கு அளவையுள் உம் இலது அத்தொகை |
உரை |
| 369. | ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி | உரை |
| 370. | முன்மொழி பின்மொழி பல்மொழி புறமொழி எனும் நான்கு இடத்தும் சிறக்கும் தொகைப்பொருள் |
உரை |
| 371. | வல் ஒற்று வரினே இடத்தொகை ஆகும் மெல் ஒற்று வரினே பெயர்த்தொகை ஆகும் |
உரை |
| 372. | உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறே | உரை |
| 373. | தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ் எல்லைப் பொருளின் மயங்கும் என்ப |
உரை |