தொடக்கம் | ||
வழாநிலை வழுவமைதி
|
||
375. | திணையே பால் இடம் பொழுது வினா இறை மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே |
உரை |
376. | ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருள்மேல் அன்மையும் விளம்புப |
உரை |
377. | உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின |
உரை |
378. | திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே |
உரை |
379. | உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே |
உரை |
380. | ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே |
உரை |
381. | தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் |
உரை |
382. | இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே | உரை |
383. | முக்கா லத்தினும் ஒத்து இயல் பொருளைச் செப்புவர் நிகழும் காலத் தானே |
உரை |
384. | விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி |
உரை |
385. | அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் |
உரை |
386. | சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும் எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப்பொருண்மையின் நேர்ப |
உரை |
387. | வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் | உரை |
388. | எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே |
உரை |
389. | வேறுவினை பல்பொருள் தழுவிய பொதுச்சொலும் வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் |
உரை |
390. | வினை சார்பு இனம் இடம் மேவி விளங்காப் பலபொருள் ஒருசொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே |
உரை |
391. | எழுத்து இயல் திரியாப் பொருள்திரி புணர்மொழி இசைத் திரிபால் தெளிவு எய்தும் என்ப |
உரை |
392. | ஒருபொருள் மேல்பல பெயர்வரின் இறுதி ஒருவினை கொடுப்ப தனியும் ஒரோவழி |
உரை |
393. | திணை நிலம் சாதி குடியே உடைமை குணம் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே |
உரை |
394. | படர்க்கை முப்பெயரோடு அணையின் சுட்டுப் பெயர்பின் வரும்வினை எனின் பெயர்க்கு எங்கும் மருவும் வழக்கு இடை செய்யுட்கு ஏற்புழி |
உரை |
395. | அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல் இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் |
உரை |
396. | இரட்டைக் கிளவி இரட்டின் பிரிந்து இசையா | உரை |
397. | ஒருபொருள் பல்பெயர் பிரிவு இல வரையார் | உரை |
398. | ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா | உரை |
399. | இனைத்து என்று அறிபொருள் உலகின் இலாப்பொருள் வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும் |
உரை |
400. | செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே |
உரை |
401. | பொருள்முதல் ஆறாம் அடைசேர் மொழி இனம் உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும் |
உரை |
402. | அடைமொழி இனம் அல்லதும் தரும் ஆண்டு உறின் | உரை |
403. | அடைசினை முதல்முறை அடைதலும் ஈர் அடை முதலோடு ஆதலும் வழக்கு இயல் ஈர் அடை சினையொடு செறிதலும் மயங்கலும் செய்யுட்கே |
உரை |
404. | இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல் | உரை |
405. | காரணம் முதலா ஆக்கம் பெற்றும் காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும் இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள் |
உரை |
406. | தம்பால் இல்லது இல் எனின் இனன் ஆய் உள்ளது கூறி மாற்றியும் உள்ளது சுட்டியும் உரைப்பர் சொல் சுருங்குதற்கே |
உரை |
407. | ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை |
உரை |
408. | முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே | உரை |
409. | கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே |
உரை |
410. | உருவக உவமையில் திணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே |
உரை |