இடையியல்
 
420. வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓர் இடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்
உரை
   
421. தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள்
உரை
   
422. பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரமே
உரை
   
423. ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை
கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓவே
உரை
   
424. வினைபெயர் குறிப்பு இசை எண்பண்பு ஆறினும்
என எனும் மொழிவரும் என்றும் அற்றே
உரை
   
425. எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே
உரை
   
426. முற்றும்மை ஒரோ வழி எச்சமும் ஆகும் உரை
   
427. செவ்வெண் ஈற்றதாம் எச்ச உம்மை உரை
   
428. பெயர்ச்செவ் வெண் ஏ என்றா எனா எண்
நான்கும் தொகைபெறும் உம்மை என்று என ஓடு
இந்நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும்
உரை
   
429. என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்து எண்பொருள் தொறும் நேரும்
உரை
   
430. வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன உரை
   
431. விழைவே காலம் ஒழியிசை தில்லே உரை
   
432. மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்
உரை
   
433. வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்றே உரை
   
434. மற்றையது என்பது சுட்டியதற்கு இனம் உரை
   
435. கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே உரை
   
436. ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே உரை
   
437. அந்தில் ஆங்கு அசைநிலை இடப் பொருளவ்வே உரை
   
438. அம்ம உரையசை கேண்மின் என்று ஆகும் உரை
   
439. மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் உரை
   
440. மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை
உரை
   
441. யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசைமொழி
உரை