உரியியல்
 
442. பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்
உரை
   
443. உயிர் உயிர் அல்லதாம் பொருள் குணம் பண்பே உரை
   
444. மெய் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க்கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந்து ஆகும்
உரை
   
445. புல்மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர் உரை
   
446. முரள் நந்து ஆதி நாஅறிவொடு ஈர் அறிவு உயிர் உரை
   
447. சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர் உரை
   
448. தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர் உரை
   
449. வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதி செவி அறிவோடு ஐ அறிவு உயிரே
உரை
   
450. உணர்வு இயலாம் உயிர் ஒன்றும் ஒழித்த
உடல் முதல் அனைத்தும் உயிர் அல் பொருளே
உரை
   
451. ஒற்றுமை நயத்தின் ஒன்று எனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர்
உரை
   
452. அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல் கொள் உயிர்க்குணம்
உரை
   
453. துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்
உரை
   
454. பல்வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள்குணம்
உரை
   
455. தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இருபொருள் தொழில்குணம்
உரை
   
456. சால உறு தவ நனி கூர் கழி மிகல் உரை
   
457. கடி என் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்
உரை
   
458. மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்பு அறை
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே
உரை
   
459. முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
உரை
   
460. இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூலுள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே
உரை
   
461. சொல் தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும்
தெற்றென உணர்தல் தெள்ளியோர் திறனே
உரை
   
462. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழு அல கால வகையின் ஆனே
உரை