தொடக்கம் |
அகத்திணையியல்
|
|
|
அகப்பொருளின் வகை |
1
| மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ்
அகப்பொருள் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை , என எழு பெற்றித்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
அகப்பொருள்
சொல்லப்படும் திறன் |
2.
| அதுவே, புனைந்துரை, உலகியல் , எனும் திறம்
இரண்டினும் தொல் இயல் வழாமல் சொல்லப்படுமே. |
|
உரை
|
|
|
|
|
கைக்கிளை இன்ன
தென்பது |
3.
| .அவற்றுள், கைக்கிளை உடையது ஒருதலைக் காமம் |
|
உரை
|
|
|
|
|
ஐந்தினை இன்னதென்பது |
4.
| .ஐந்திணை உடையது அன்புடைக் காமம் . |
|
உரை
|
|
|
|
|
பெருந்தினை
இன்னதென்பது |
5.
| பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் . |
|
உரை
|
|
|
|
|
ஐந்திணையின் பெயர் |
6.
| குறிஞ்சி, பாலை , முல்லை , மருதம், நெய்தல் ,
ஐந்திணைக்கு எய்திய பெயரே. |
|
உரை
|
|
|
|
|
ஐந்திணைக்கும் உரிய
பொருள்கள் |
7.
| அவைதாம், முதல்பொருள் , கருப்பொருள் , உரிப்பொருள்
, என முறை நுதல் பொருள் மூன்றினும் நுவலப்படுமே. |
|
உரை
|
|
|
|
|
முதல் பொருள் |
8.
| நிலமும் , பொழுதும் ,என முதல் இரு வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
நிலம் |
9
| வரையே,சுரமே,புறவே, பழனம், திரையே;அவை அவை
சேர்தரும் இடனே; என ஈர்- ஐ வகைத்து அனை இயல் நிலமே. |
|
உரை
|
|
|
|
|
பொழுது |
10..
| பெரும்பொழுது என்றா. சிறுபொழுது என்றா, இரண்டு
கூற்றது இயம்பிய பொழுதே. |
|
உரை
|
|
|
|
|
பெரும்பொழுது |
11.
| காரே, கூதிர் , முன்பனி , பின்பனி, சீர் இளவேனில்
, வேனில் ,என்று ஆங்கு இரு- மூன்று ,திறத்தது தெரி பெரும் பொழுதே. |
|
உரை
|
|
|
|
|
சிறுபொழுது |
12.
| மாலை , யாமம் , வைகறை , எற்படு காலை ,
வெங்கதிர்காயும் நண்பகல் , எனக் கைவகைச் சிறுபொழுது ஐ வகைத்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
குறிஞ்சிக்குரிய
பெரும்பொழுதும் சிறுபொழுதும் |
13. | அவற்றுள், கூதிர் , யாமம் , முன்பனி , என்று இவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும். |
|
உரை
|
|
|
|
|
பாலைக்குரிய
பெரும்பொழுதும் சிறுபொழுதும் |
14.
| வேனில் , நண்பகல் , பின்பனி , என்று இவை
பான்மையின் உரிய , பாலை தனக்கே. |
|
உரை
|
|
|
|
|
முல்லைக்குரிய
பெரும்பொழுதும் சிறுபொழுதும் |
15.
| மல்கு கார் , மாலை , முல்லைக்கு உரிய . |
|
உரை
|
|
|
|
|
மருதத்துக்குரிய
சிறுபொழுது |
16.
| இருள் புலர் காலை , மருதத்திற்கு உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
நெய்தற்குரிய
சிறுபொழுது |
17.
| வெய்யோன் பாடு , நெய்தற்கு உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
மருதம் நெய்தல்
என்னும் இரண்டிற்குரிய பெரும்பொழுது |
18.
| மருதம் , நெய்தல் , என்று இவை இரண்டிற்கும் உரிய
பெரும்பொழுது இரு -மூன்றும்மே. |
|
உரை
|
|
|
|
|
கருப்பொருள் |
19.
| ஆரணங்கு , உயர்ந்தோர் , அல்லோர் , புள் , விலங்கு
ஊர் , நீர் ,பூ , மரம் , உணாப் , பறை , யாழ் , பண், தொழில் ; எனக் கரு ஈர்-எழு
வகைத்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
குறிஞ்சியின்
கருப்பொருள் |
20.
| விறல் சேய் , பொருப்பன் , வெற்பன் , சிலம்பன் ;
குறத்தி , கொடிச்சி , குறவர் , கானவர், குறத்தியர் ; கிளி , மயில் ,மறப்புலி
, குடாவடி , கறையடி, சீயம் , சிறுகுடி , அருவி, நறுஞ்சுனை ; வேங்கைக் ,
குறிஞ்சி , காந்தள், ஆரம் , தேக்கு , அகில் , அசோகம் , நாகம் , வேரல் ;
ஐவனம் தோரை , ஏனல்; கறங்கிசைத் தொண்டகம் , குறிஞ்சியாழ் , குறிஞ்சி ;
வெறிகோள் , ஐவனம்வித்தல் , செறிகுரல் பைந்தினை காத்தல் ,செந்தேன் அழித்தல் ,
செழுங்கிழங்கு அகழ்தல் , முழங்கி வீழ் அருவியொடு, கொழுஞ்சுனை ஆடல் ;
குறிஞ்சிக் கருப்பொருளே. |
|
உரை
|
|
|
|
|
பாலையின் கருப்பொருள் |
21.
| கன்னி , விடலை , காளை , மீளி ; இன்நகை எயிற்றி ,
எயினர் , எயிற்றியர், மறவர் , மறத்தியர் ; புறவு , பருந்து , எருவை கழுகு ;
செந்நாய் , கல்கெழு குறும்பு , குழிவறுங் கூவல் , குராஅ , மராஅ, உழிஞ்சில் ,
பாலை , ஓமை, இருப்பை; வழங்குகதிக் கொண்டன , செழும்பதிக் கவர்ந்தன ; பகைத்துடி
, பாலையாழ் ,பஞ்சுரம் ; வெஞ்சமம் , பகல் சூறையாடல் ,பாலைக் கருப்பொருளே. |
|
உரை
|
|
|
|
|
முல்லையின்
கருப்பொருள் |
22.
| நெடுமால் , குறும்பொறை , நாடன் , தோன்றல் , வடு
இல் கற்பின் மனைவி , கிழத்தி ; இடையர் , இடைச்சியர் ,ஆயர் , ஆய்ச்சியர் ;
கான வாரணம் , மான் ,முயல் ; பாடி , குறுஞ்சுனை கான் யாறு ; குல்லை , முல்லை
, நிறங்கிளர் தோன்றி , பிறங்கு அலர்ப் பிடவம், கொன்றை ,காயா ; மன்றலங்
குருந்தம் , தாற்றுக்கதிர் வரகொடு , சாமை , முதிரை ; ஏற்றுப்பறை ,
முல்லையாழ் . சாதாரி; சாமை ,வரகு , தரமுடன் வித்தல் , அவை களை கட்டல் ,
அரிதல் , கடாவிடல், செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல், மூ இனம் மேய்த்தல்
,சே இனம் தழுவல், கழுமிய குரவையொடு , கான்யாறு என்று இவை முழுது உடன்
ஆடல் , முல்லைக் கருப்பொருளே. |
|
உரை
|
|
|
|
|
மருதத்தின்
கருப்பொருள் |
23.
| இந்திரன் , ஊரன் , பைந்தார் மகிழ்நன் ; கெழுதகு
கற்பின் கிழத்தி , மனைவி, உழவர் ,உழத்தியர் , கடையர் , கடைச்சியர் ; மழலை
வண்டானம் , மகன்றில் , நாரை, அன்னம் ,போதா ,நல் நிறக் கம்புள், குருகு ,
தாரா ; எருமை , நீர்நாய் ; பெருகிய சிறப்பின் பேரூர் , மூதூர்; ஆறு ,
மனைக்கிணறு ; இலஞ்சி , தாமரை, நாறு இதழ்க் கழுநீர் , நறுமலர்க் குவளை ,
காஞ்சி , வஞ்சி , பூஞ்சினை மருதம் ; செந்நெல் , வெண்நெல் , அந் நெல்லரிகிணை,
மன்றன் முழவம் , மருதயாழ் , மருதம் ; மன்று அணி விழாக்கோள் , வயல் களை
கட்டல், அரிதல் , கடாவிடல் , அகல் குளம் குடைதல், வருபுனல் ஆடல் , மருதக்
கருப்பொருளே. |
|
உரை
|
|
|
|
|
நெய்தலின்
கருப்பொருள் |
24.
| வருணன் , சேர்ப்பன் , விரிதிரைப் புலம்பன் ; பரும
அல்குல் பரத்தி , நுளைச்சி ; நுளையர் , நுளைச்சியர் , பரதர் , பரத்தியர் ,
அளவர் , அளத்தியார அலைகடற் காக்கை , சுறவம், பாக்கம் , பெறல் ,அரும்
பட்டினம் ; உவர் நீர்க் கேணி , கவர் நீர் ; நெய்தல் , கண்டகக் கைதை ,
முண்டகம் ,அடம்பு ; கண்டல் , புன்னை , வண்டு இமிர் ஞாழல் , புலவு மீன் ,
உப்பு விலைகளின் பெற்றன ; நளி மீன்கோட்பறை , நாவாய்ப் பம்பை , விளரியாழ்
, செவ்வழி ; மீன் , உப்புப் படுத்தல், உணங்கு , அவை விற்றல் , மீன் உணக்கல்
,புள்ளோப்பல், நெடுங்கடல் ஆடல் , நெய்தல் கருப்பொருளே. |
|
உரை
|
|
|
|
|
உரிப்பொருள் |
25.
| புணர்தலும் , பிரிதலும் , இருத்தலும் , ஊடலும்,
இரங்கலும் ,இவற்றின் நிமித்தமும் என்று ஆங்கு எய்திய உரிப்பொருள் ஐ-இரு வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
கைகோளின் வகை |
26.
| அளவு இல் இன்பத்து ஐந்திணை மருங்கின் களவு , கற்பு
, என இரு கைகோள் வழங்கும் . |
|
உரை
|
|
|
|
|
களவின்கண் நிகழும்
புணர்ச்சி |
27.
| இயற்கைப் புணர்ச்சி , இடந்தலைப்பாடு, பாங்கன்
கூட்டம் , பாங்கியின் கூட்டம் , என்று உணர்த்திய களவில் புணர்ச்சி நால்
வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
கைக்கிளை நிகழும்
காலம் |
28.
| மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்,
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
கைக்கிளை இன்னதென்பது |
29.
| அதுவே, காமம் சான்ற இளமையோள்வயின் குறிப்பு
அறிகாறும் குறுகாது நின்று குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
கைக்கிளைக்கு உரிய
தலைமக்கள் |
30.
| மறையோர் , மன்னவர் , வணிகர் , சூத்திரர் , எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே. |
|
உரை
|
|
|
|
|
|
31.
| அதுவே, மொழிந்தோர் நால்வரும் மொழிந்த ஐந் நிலத்து
உறை இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரும் எய்துப. |
|
உரை
|
|
|
|
|
இயற்கைப்
புணர்ச்சியின் இலக்கணம் |
32.
| தெய்வம் தன்னின் எய்தவும், கிழத்தியின் எய்தவும்
படூஉம் இயற்கைப் புணர்ச்சி. |
|
உரை
|
|
|
|
|
இயற்கைப்புணர்ச்சிக்கொரு சிறப்புவிதி |
33.
| இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி முயற்சி
இன்றி முடிவது ஆகும். |
|
உரை
|
|
|
|
|
களவொழுக்கின் கண்
புணர்ச்சி நிகழும்திறம் |
34.
| உள்ளப் புணர்ச்சியும் ,மெய் உறு புணர்ச்சியும்,
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
உள்ளப் புணர்ச்சி
நிகழும் காலம். |
35.
| பொருவிறந்தோற்குப் பெருமையும்,உரனும்; நல் நுதற்கு
அச்சமும், நாணமும் ,மடனும்; மன்னிய குணங்கள் ஆதலின் முன்னம் உள்ளப்
புணர்ச்சி உரியது ஆகும். |
|
உரை
|
|
|
|
|
மெய்யுறு புணர்ச்சி
நிகழுங் காலம் |
36.
| காட்சி முதலாச் சாக்காடு ஈறாக், காட்டிய பத்தும்
கைவரும் எனினே, மெய் உறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
களவுப் புணர்ச்சி
நிகழும் இடம் |
37.
| பகற்குறி , இரவுக்குறி ,எனும் பான்மைய புகற்சியின்
அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே. |
|
உரை
|
|
|
|
|
பகற்குறி ,இரவுக்குறி |
38.
| இல்வரை இகந்தது பகற்குறி ; இரவுக்குறி இல்வரை இகவா
இயல்பிற்று ஆகும். |
|
உரை
|
|
|
|
|
களவில் பிரிவு |
39.
| ஒருவழித் தணத்தல், வரைவு இடை வைத்துப் பொருள்வயின்
பிரிதல் , என்று இருவகைத்து ஆகும் நிறைதரு காதல் மறையினில் பிரிவே. |
|
உரை
|
|
|
|
|
40.
| ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார் |
|
உரை
|
|
|
|
|
41.
| வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் இருதுவின்
கண்ணுடைத்து என்மனார் புலவர். |
|
உரை
|
|
|
|
|
வரைவு |
42.
| களவு வெளிப்படா முன்னும் , பின்னும், விளையும்
நெறித்து என விளம்பினர் வரைவே. |
|
உரை
|
|
|
|
|
43.
| நான்கு வகைப் புணர்வினும் தான் தெருண்டு வரைதலும்,
பாங்கனில் , பாங்கியில் ,தெருளுற்று வரைதலும் களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
44.
| உடன்போய் வரைதலும் ,மீண்டு வரைதலும், உடன்போக்கு
இடையீடு உற்று வரைதலும், களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
45.
| உடன்போய் வரைதல் ஒரு வகைத்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
46.
| அவள் மனை வரைதலும் , தன் மனை வரைதலும், என மீண்டு
வரைதல் இரு வகைத்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
அறத்தொடுநிலை |
47.
| ஆற்று ஊறு அஞ்சினும் , அவன் வரைவு மறுப்பினும்,
வேற்று வரைவு நேரினும், காப்புக் கைமிகினும்; ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு
நிலையே. |
|
உரை
|
|
|
|
|
அறத்தொடு நிற்றற்கு
உரியாரும், அவர்கள் அறத்தொடு நிற்கும் நெறியும் |
48.
| தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்; பாங்கி
செவிலிக்கு அறத்தொடு நிற்கும்; செவிலி நற்றாய்க்கு அறத்தெடு நிற்கும்;
நாற்றாய் தந்தை, தன் ஐயர்க்கு அறத்தொடு நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே. |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் அறத்தொடு
நிற்கும் இடம் |
49.
| ஒருபுணர்வு ஒழிந்தவற்றும் , ஒருவழித் தணப்பவும்,
வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரியவும், இறைவனைச் செவிலி குறிவயின்
காணவும், மனைவயின் செறிப்பவும் , வருத்தம் கூரின் வினவியக் கண்ணும்,
வினவாக் கண்ணும், அன நடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும். |
|
உரை
|
|
|
|
|
பாங்கி அறத்தொடு
நிற்கும் இடம் |
50.
| முன்னிலைப் புறமொழி , முன்னிலை மொழிகளில்,
சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும். |
|
உரை
|
|
|
|
|
செவிலி அறத்தொடு
நிற்கும் இடம் |
51.
| செவிலி நற்றாய்க்குக் கவலை இன்று உணர்த்தும் |
|
உரை
|
|
|
|
|
நற்றாய் அறத்தொடு
நிற்கும் திறம் |
52.
| நற்றாய் அறத்தொடு நிற்கும் காலைக் குரவனும் , தன்
ஐயும் , குறிப்பின் உணர்ப. |
|
உரை
|
|
|
|
|
அறத்தொடு
நிற்பார்க்குவினா நிகழும் இடம் |
53.
| பாங்கி தலைவியை வினவும் , செவிலி பாங்கியை வினவும்
,பாங்கி தன்னையும் நற்றாய் தானும் வினவும் , செவிலியின் பொற்றொடிக்
கிழத்தியை உற்று நோக்கின். |
|
உரை
|
|
|
|
|
உடன்போக்கு
நிகழ்ந்தவிடத்து அறத்தொடு நிற்றற்கு உரியார் |
54.
| ஆங்கு உடன் போயுழி , அறத்தொடு நிற்ப பாங்கியும் ,
செவிலியும் , பயந்த தாயும். |
|
உரை
|
|
|
|
|
கற்பு |
55
| களவின் வழி வந்த கற்பும் , பொற்பு அமைக் களவின்
வழி வாராக் கற்பும் என்று ஆங்கு முற்படக் கிளந்த கற்பு இரு வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
56.
| குரவரின் புணர்ச்சி , வாயிலின் கூட்டம் என்று
இருவகைத்து ஆகும் கற்பில் புணர்ச்சி. |
|
உரை
|
|
|
|
|
57.
| அவற்றுள் களவின் வழிவந்த கற்பில் , புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே உடன்போய் வரைதலும் உண்மையான. |
|
உரை
|
|
|
|
|
58.
| மறையின் புணர்ச்சியும் , மன்றல் புணர்ச்சியும்,
இறைவற்கு எய்தல் உண்டு இருவகைக் கற்பினும். |
|
உரை
|
|
|
|
|
59.
| காதல் பரத்தையர் , காமக் கிழத்தியர், பின்முறை
வதுவைப் பெருங்குலக் கிழத்தி , என்று அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும். |
|
உரை
|
|
|
|
|
60.
| அவருள் காதல் பரத்தையர் களவிற்கு உரியர் |
|
உரை
|
|
|
|
|
61.
| ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர். |
|
உரை
|
|
|
|
|
கற்பில் பிரிவு
கற்பில் நிகழும் பிரிவின் வகை |
62.
| பரத்தையின் பிரிதல் , ஓதற்குப் படர்தல், அருள் தகு
காவலொடு , தூதிற்கு அகறல், உதவிக்கு ஏகல் , நிதியிற்கு இகத்தல் ,என்று
உரை பெறு கற்பில் பிரிவு அறு வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
பரத்தைதிற்
பிரிவின்வகை |
63.
| அயல் மனைப் பிரிவு , அயல் சேரியின் அகற்சி,
புறநகர்ப் போக்கு ,இவை புரவலற்கு உரிய பரத்தையின் பிரியும் பருவத்தான. |
|
உரை
|
|
|
|
|
64.
| கெழீஇய காமக் கிழத்தியர் பொருட்டாத், தழீஇய அயல்
மனைத் தலைவன் பிரியும். |
|
உரை
|
|
|
|
|
65.
| பின்னர் வரைந்த பெதும்பையும் , பரத்தையும்,
இன்னியல் விழவும் ,ஏதுவாக அவன் அயல் சேரியின் அகலும் என்ப. |
|
உரை
|
|
|
|
|
66.
| விருந்து இயல் பரத்தையைப் பெருந்தேர்மிசைக் கொண்டு,
இளமரக் காவின் விளையாடற்கும், புனல் ஆடற்கும் ,புறநகர்ப் போகும். |
|
உரை
|
|
|
|
|
ஊடல் |
67.
| ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு . |
|
உரை
|
|
|
|
|
ஊடல் தணிக்கும்
வாயில்கள் |
68.
| கொளை வல் பாணன் , பாடினி , கூத்தர், இளையர் ,
கண்டோர் , இருவகைப் பாங்கர் , பாகன் , பாங்கி , செவிலி , அறிவர். காமக்
கிழத்தி , காதல்புதல்வன், விருந்து , ஆற்றாமை , என்று இவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
கல்வி |
69.
| ஓதல் தொழில் உரித்து , உயர்ந்தோர் மூவர்க்கும். |
|
உரை
|
|
|
|
|
70.
| அல்லாக் கல்வி , எல்லார்க்கும் உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
71.
| படைக்கலம் பயிறலும் , பகடு பிற ஊர்தலும் உடைத்
தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே. |
|
உரை
|
|
|
|
|
காவல் |
72.
| அறப்புறம் காவல் , நாடு காவல் , எனச் சிறப்புறு
காவல் திறம் இரு வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
73.
| அறப்புறம் காவல், அனைவர்க்கும் உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
74.
| மற்றைக் காவல் , கொற்றவர்க்கு உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
தூது |
75.
| வேத மாந்தர் , வேந்தர் , என்று இருவர்க்கும் தூது
போதல் தொழில் உரித்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
76.
| சிறப்புப் பெயர் பெறின் செப்பிய இரண்டும் உறற்கு
உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும். |
|
உரை
|
|
|
|
|
துணை |
77.
| உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
நான்கு
வருணத்தார்க்கும் உரியபிரிவு |
78.
| பரத்தையின் பிரிவும் , பொருள்வயின் பிரிவும்,
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும். |
|
உரை
|
|
|
|
|
79.
| இழிந்தோர் தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் , என மொழிந்தனர் புலவர். |
|
உரை
|
|
|
|
|
80.
| கல்வி முதலா எல்லா வினைக்கும் சொல்லி அகறலும்
,சொல்லாது அகறலும் உரியன் கிழவோன் , பெருமனைக் கிழத்திக்கு. |
|
உரை
|
|
|
|
|
81.
| சொல்லாது அகலினும், சொல்லும் பாங்கிக்கு . |
|
உரை
|
|
|
|
|
82.
| குறிப்பின் உணர்த்தும், பெறற்கு அருங்கிழத்திக்கு. |
|
உரை
|
|
|
|
|
83.
| காலில் சேறலும் , கலத்தில் சேறலும், ஊர்தியில்
சேறலும் , நீதி ஆகும். |
|
உரை
|
|
|
|
|
84.
| புலத்தில் சிறந்த புரிநூன் முதல்வர்க்கு, கலத்தில்
சேறல் கடன் அன்று என்ப. |
|
உரை
|
|
|
|
|
85.
| வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும், குல மட
மாதரொடு கலமிசைச் சேறலும், பாசறைச் சேறலும் , பழுது என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
செலவு அழுங்கல் |
86.
| ஓதல் முதலா ஓதிய ஐந்தினும், பிரிவோன் அழுங்கற்கும்
உரியன் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
87.
| இல்லத்து அழுங்கலும் , இடைச் சுரத்து அழுங்கலும்,
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே. |
|
உரை
|
|
|
|
|
88.
| தலைவி தன்னையும் , தன் மனம் தன்னையும், அலமரல்
ஒழித்தற்கு அழுங்குவது அல்லது , செல்வத் தோன்றல் செல்லான் அல்லன். |
|
உரை
|
|
|
|
|
பிரிவுக் காலம் |
89.
| அவற்றுள், ஓதல் பிரிவு உடைத்து, ஒரு மூன்று யாண்டே |
|
உரை
|
|
|
|
|
90.
| தூதின் பிரிவும் , துணைவயின் பிரிவும்,
பொருள்வயின் பிரிவும் , ஓர் யாண்டு உடைய. |
|
உரை
|
|
|
|
|
பிரிதற்கு ஆகாத காலம் |
91.
| பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீராடிய பின்
ஈர்-ஆறு நாளும், கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின், பிரியப் பெறாஅன்
பரத்தையின் பிரிவோன். |
|
உரை
|
|
|
|
|
92.
| ஓதற்கு அகன்றோன் , ஒழிந்து இடை மீண்டு போதற்கு
இயையவும் , புலம்பவும் , பெறாஅன். |
|
உரை
|
|
|
|
|
93.
| தூதும் , துணைமையும் , ஏதுவாகச் சென்றோன் அவ்வினை
, நின்று நீட்டித்துழிப் புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே. |
|
உரை
|
|
|
|
|
கற்பில் தலைவி
ஒழுக்கம் |
94.
| பூத்தமை சேடியின் புரவலற்கு உணர்த்தலும், நீத்தமை
பொறாது நின்று கிழவோனைப் பழிக்கும் காமக் கிழத்தியைக் கழறலும், கிழவோன்
கழறலும், வழிமுறை மனைவியைக் கொழுநனொடு வந்து எதிர் கோடலும் ,அவனொடு
பாங்கொடு பரத்தையைப் பழித்தலும் , நீங்கிப் புறநகர்க் கணவனொடு போகிச்
செறிமலர்ச் சோலையும் , காவும் ,மாலையங் கழனியும், மாலை வெள்ளருவியும்
,மலையும் ,கானமும், கண்டு விளையாடலும் ,கடும்புனல் யாறும், வண்டு இமிர்
கமல வாவியும் , குளனும், ஆடி விளையாடலும் கூடும் கிழத்திக்கு. |
|
உரை
|
|
|
|
|
வாயில்கள் பாணன் |
95.
| வாயில் வேண்டலும், வாயில் நேர்வித்தலும், சேயிழை
ஊடல் தீர்த்தலும் , போயுழி. அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் , அவன்வயின்
செல்ல விரும்பலும் , சென்று அவற்கு உணர்த்தலும் , சொல்லிய கூற்று எனச் சொல்லலும்
, கிழவோன் வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும், அணிநலம் பெற்றமை அறியான்
போன்று அவள் பணிவொடு வினாதலும் ,பாணற்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
விறலி |
96.
| செலவில் தேற்றலும் ,புலவியில் தணித்தலும், வாயில்
வேண்டலும் , வாயில் நேர்வித்தலும், தெரியிழை விறலிக்கு உரிய ஆகும். |
|
உரை
|
|
|
|
|
கூத்தர் |
97.
| செல்வம் வாழ்த்தலும் , நல் அறிவு கொளுத்தலும்,
கலன் அணி புணர்த்தலும், காமம் நுகர்பு உணர்த்தலும், புலவி முதிர்காலைப் புலம்கொள
ஏதுவில் தேற்றலும் , சேய்மை செப்பலும் , பாசறை மேற்சென்று உரைத்தலும் ,
மீண்டு வரவு உணர்த்தலும் , கூற்றரு மரபில் கூத்தர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
இளையோர் |
98.
| மடந்தையை வாயில் வேண்டலும் , வாயில்
உடன்படுத்தலும் , அவள் ஊடல் தீர்த்தலும், கொற்றவற்கு உணர்த்தலும், குற்றேவல்
செய்தலும், சென்று முன் வரவு செப்பலும் , அவன் திறம். ஒன்றி நின்று
உரைத்தலும் ,வினைமுடிவு உரைத்தலும், வழி இயல்பு கூறலும் ,வழியிடைக் கண்டன
மொழிதலும், இளையோர் தொழில் என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
கண்டோர் |
99.
| தீது உடைப் புலவி தீர்த்தலும் ,அவன் வரல்
காதலிக்கு உரைத்தலும் ,கண்டோர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
பார்ப்பனர் |
100.
| இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும் நிலையாத்
தன்மை நிலை எடுத்து உரைத்தலும், செலவு அழுங்குவித்தலும், செலவு உடன் படுத்தலும்,
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
சூத்திரப் பாங்கர் |
101.
| நன்மையின் நிறுத்தலும் ,தீமையின் அகற்றலும்,
சொன்னவை பிறவும் சூத்திரர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
பாகன் |
102.
| சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும், வாயில்
நேர்வித்தலும் , வயங்கு துனி தீர்த்தலும், வினை முடித்ததன் பின் வியன்பதி
சேய்த்து என இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே. |
|
உரை
|
|
|
|
|
பாங்கி |
103.
| பிரிவுழி விலக்கலும் ,பிரிவு உடன் படுத்தலும்,
பிரிவுழித் தேற்றலும் , பிரிவுழி அழுங்கலும், பிறவும் , உரிய இறைவளைப்
பாங்கிக்கு. |
|
உரை
|
|
|
|
|
செவிலி , அறிவர் |
104.
| முன்வரு நீதியும் , உலகியல் முறைமையும், பின்வரும்
பெற்றியும், பிறவும் , எல்லாம் தெற்று எனக் கூறல் செவிலித் தாயக்கும், உற்ற
அறிவர்க்கும் உரிய ஆகும். |
|
உரை
|
|
|
|
|
காமக்கிழத்தியர் |
105.
| குடிப் பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்,
மனைவியைப் பழித்தலும் ,வாடா ஊடலுள் தலைவன் கழறலும் , மனைவிக்கு அமைந்த
ஒழுக்கமும்,காமக்கிழத்தியர்க்கு உரிய. |
|
உரை
|
|
|
|
|
பரத்தையர் |
106.
| கிழவோன் தன்னையும் , கிழத்தி தன்னையும், இகழ்தலும்
, தம்மைப் புகழ்தலும் , நிகழ்பொருள் காத்தலும் , பரத்தையர் கடன் என மொழிப, |
|
உரை
|
|
|
|
|
107.
| பரத்தையர் , காதல் பரத்தையைப் புகழ்தலும், தம்மை
இகழ்தலும் தம்முளும் கூறுப. |
|
உரை
|
|
|
|
|
இளையர் |
108.
| இளையர் கிழவோற்கு இரவும், பகலும், களைதல் இல்லாக்
கவசம் போல்வார். |
|
உரை
|
|
|
|
|
பாங்கர் |
109.
| இருவகைப் பாங்கரும் , ஒருபெருங் குரிசிற்கு இன்
உயிர்த் துணையா , இருபெருங் குரவரும் தன்னை அளித்த தகைமையோரே. |
|
உரை
|
|
|
|
|
தோழி |
110.
| தோழி , செவிலி மகளாய்ச் சூழ்தலோடு உசாத்துணை ஆகி
,அசாத் தணிவித்தற்கு உரிய , காதல் மருவிய துணையே. |
|
உரை
|
|
|
|
|
செவிலி |
111.
| செவிலி, நாற்றாய் தோழி ஆகி அவலம் நீக்கி அறிவும்,
ஆசாரமும், கொளுத்தித் தலைவியை வளர்த்த தாயே. |
|
உரை
|
|
|
|
|
அறிவர் |
112.
| அறிவர் கிழவோன் , கிழத்தி , என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர். |
|
உரை
|
|
|
|
|
காமக்கிழத்தியர் |
113.
| ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வரு , குலப் பரத்தையர்
மகளிர் ஆகிக். காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர். |
|
உரை
|
|
|
|
|
காதல் பரத்தையர் |
114.
| யாரையும் நயவா இயல்பில் , சிறந்த சேரிப் பரத்தையர்
மகளிர் ஆகிக் காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் |
|
உரை
|
|
|
|
|
115.
| அவருளும் வரைதற்கு உரியோர் உளரே. |
|
உரை
|
|
|
|
|
116.
| மக்களொடு மகிழ்ந்து , மனையறம் காத்து, மிக்க
காமத்து வேட்கை தீர்ந்துழித் தலைவனும் ,தலைவியும் தம் பதி நீங்கித் தொலைவு
இல் சுற்றமொடு துறவறம் காப்ப. |
|
உரை
|
|
|
|