களவு இயல்
 
117. .உளம் மலி காதல் களவு எனப்படுவது
ஒரு நான்கு வேதத்து , இரு -நான்கு மன்றலுள்,
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப.
உரை
   
கைக்கிளை
118. காட்சி , ஐயம் , துணிவு , குறிப்பறிவு ,என
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை.
உரை
   
காட்சி
119. புணர்ப்பதும் , பிரிப்பதும் , ஆகிய பால்களுள்
புணர்க்கும் பாலில் , பொருவிறந்து ஒத்த
கறைவேல் காளையும் , கன்னியும் , காண்ப;
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார்.
உரை
   
ஐயம்
120. மடமான் நோக்கி வடிவும் , கண்ட
இடமும் , சிறுந்துழி எய்துவது ஐயம் .
உரை
   
துணிவு
121. எழுதிய வல்லியும் , தொழில்புனை கலனும்,
வாடிய மலரும் , கூடிய வண்டும்,
நடைபயில் அடியும் , புடைபெயர் கண்ணும்,
அச்சமும், பிறவும் ,அவன் பால் நிகழும்
கச்சம் இல் ஐயம் கடிவன ஆகும்.
உரை
   
குறிப்பு அறிதல்
122. அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப.
உரை
   
களவிற்கு உரிய கிளவித் தொகை
123. இயற்கைப் புணர்ச்சி , வன்புறை, தெளிவே,
பிரிவுழி மகிழ்ச்சி , பிரிவுழிக் கலங்கல்,
இடந்தலைப்பாடு , பாங்கன் கூட்டம்,
பாங்கி மதியுடன்பாடு , பாங்கியின் கூட்டம்.
பாங்கு அமை பகற்குறி ,பகற்குறி இடையீடு
இரவுக் குறியே, இரவுக்குறி இடையீடு,
வரைவு வேட்கை , வரைவு கடாதல்,
ஒரு வழித்தணத்தல் , வரைவு இடை வைத்துப்
பொருள்வயின் பிரிதல் ,என்று ஒரு பதினேழும்
களவிற்கு உரிய கிளவித் தொகையே.
உரை