இயற்கைப் புணர்ச்சி
 
124. தெய்வம் புணர்ப்பச் சிந்தை வேறு ஆகி ,
எய்தும் கிழத்தியை இறையோன் என்ப,
உரை
   
தெய்வப் புணர்ச்சி
125. கலந்துழி மகிழ்தலும் , நலம் பாராட்டலும்,
ஏற்புற அணிதலும் ; என்னும் இம் மூன்றும்
போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே.
உரை
   
தலைவியிற் புணர்ச்சி
126. வேட்கை உணர்த்தல் , மறுத்தல் ,உடன்படல் ,
கூட்டம் ,என்று இறைவியின் கூட்டம் நால்வகைத்தே.
உரை
   
127. இரந்து பின்நிற்றற்கு எண்ணலும் , இரந்து
பின்னிலை நிற்றலும் , முன்னிலை ஆக்கலும் ,
மெய்தொட்டுப் பயிறலும் , பொய் பாராட்டலும்,
இடம் பெற்றுத் தழாஅலும் , வழிபாடு மறுத்தலும்,
இடையூறு கிளத்தலும், நீடு நினைந்து இரங்கலும் ,
மறுத்து எதிர் கோடலும் , வறிது நகை தோற்றலும் ,
முறுவல் குறிப்பு உணர்தலும் , முயங்குதல் உறுத்தலும்,
புணர்ச்சியின் மகிழ்தலும், புகழ்தலும், பிறவும்
உணர்த்திய தலைவியின் புணர்ச்சின் விரியே.
உரை