137.
| தலைவன் பாங்கனைச் சார்தலும் , பாங்கன் தலைவனை உற்றது வினாதலும், தலைவன் உற்றது உரைத்தலும் , கற்று அறி பாங்கன் கழறலும் , கிழவோன் கழற்று எதிர் மறுத்தலும், கிழவோன் பழித்தலும் , கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றலும் , பாங்கன் தன் மனத்து அழுங்கலும் ,தலைவனோடு அழுங்கலும், எவ் இடத்து எவ் இயற்று என்றலும் , அவன் அஃது இவ் இடத்து இவ் இயற்று என்றலும் , பாங்கன் இறைவனைத் தேற்றலும் ,குறிவழிச் சேறலும் , இறைவியைக் காண்டலும் ,இகழ்ந்தற்கு இரங்கலும், தலைவனை வியத்தலும் ,தலைவியை வியத்தலும், தலைவன் தனக்கு தலைவி நிலை கூறலும், தலைவன் சேறலும் , தலைவியைக் காண்டலும், கலவியின் மகிழ்தலும் ,புகழ்தலும் ,தலைவியைப் பாங்கியொடு வருக எனப் பகர்தலும் ,பாங்கின் கூட்டலும் ,என்று ஈங்கு ஈட்டும் நால்- ஆறும் காட்டிய பாங்கன் கூட்டத்து விரியே. |