தொடக்கம் |
பாங்கி மதிஉடன்பாடு
|
|
|
138.
| முன் உறவு உணர்தல் . குறையுற உணர்தல் இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் , என்று ஒரு மூன்று வகைத்தே பாங்கி மதியுடன்பாடு. |
|
உரை
|
|
|
|
|
முன் உறவு உணர்தல் |
139.
| நாற்றமும் , தோற்றமும் , ஒழுக்கமும் , உண்டியும், செய்வினை மறைப்பும் , செலவும் ,பயில்வும் ,என்று இவ் வகை ஏழினும் ஐயம் உற்று ஓர்தலும் ; அவ் வகை தன்னால் ஐயம் தீர்தலும் ; மெய்யினும் , பொய்யினும் வழி நிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் சொல்லி நாடலும் ,என முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே. |
|
உரை
|
|
|
|
|
குறையுற உணர்தல் |
140.
| பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தோன் கண்ணியும் , தழையும் ,ஏந்தி நண்ணி ஊர் , பெயர் , கெடுதியோடு , ஒழிந்தவும் , வினாவுழி யாரே ? இவர் மனத்து எண்ணம் யாது ? எனத் தேர்தலும் ; எண்ணம் தெளிதலும் , என ஆங்கு ஒர் - இரண்டு ஆகும் குறையுற உணர்தல். |
|
உரை
|
|
|
|
|
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் |
141.
| கையுறை ஏந்தி வந்து அவ் வகை வினாவுழி எதிர்மொழி கொடுத்தலும் , இறைவனை நகுதலும், மதியின் அவர் அவர் மனக்கருத்து உணர்வும் ; என்று இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் ஒரு - மூன்று ஆகும் தெரியும் காலே. |
|
உரை
|
|
|
|
|
142.
| ஈங்ஙனம் இயம்பிய இரு - நான்கு கிளவியும் பாங்கி மதியுடன்பாட்டது விரியே. |
|
உரை
|
|
|
|