தொடக்கம் |
பாங்கியிற் கூட்டம்
|
|
|
143.
| இரந்து பின் நிற்றல் , சேட்படை , மடல் கூற்று , மடல் விலக்கு , உடன் படல் ,மடல் கூற்று ஒழிதல் , குறை நயப்பித்தல் , நயத்தல் , கூட்டல் , கூடல் , ஆயம் கூட்டல் ,வேட்டல் ,என்று ஈர்- ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம். |
|
உரை
|
|
|
|
|
இரந்து பின்நிற்றலும் சேட்படையும் |
144.
| தலைவன் உட்கோள் சாற்றலும் , பாங்கி குலமுறை கிளத்தலும், தலைவன் தலைவி தன்னை உயர்த்தலும் , நல் நுதல் பாங்கி அறியாள் போன்று வினாதலும், இறையோன் இறைவி தன்மை இயம்பலும் ,பாங்கி தலைவி அருமை சாற்றலும் ,தலைவன் இன்றியமையாமை இயம்பலும், பாங்கி நின் குறை நீயே சென்று உரை என்றலும் , பாங்கியைத் தலைவன் பழித்தலும் , பாங்கி பேதைமை ஊட்டலும், காதலன் தலைவி மூதறி உடைமை மொழிதலும், பாங்கி முன்னுறு புணர்ச்சி முறை உறக் கூறலும் , தன் நிலை தலைவன் சாற்றலும் , பாங்கி உலகியல் உரைத்தலும் ,தலைமகன் மறுத்தலும், பாங்கி அஞ்சி அச்சுறுத்தலும் ,ஆங்கு அவன் கையுறை புகழ்தலும், தையல் மறுத்தலும், ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தலும் , அவள் ஆற்றுவித்து அகற்றலும் ,ஆகும் நால் - ஐந்தும் இரந்து பின் நிற்றற்கும் , சேட்படுத்தற்கும், பொருந்துவ என்மனார் தெரிந்திசினோரே. |
|
உரை
|
|
|
|
|
மடல் கூற்றும் , மடல் விலக்கும் |
145.
| இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருள் என மதித்தலும், பாங்கிக்கு உலகின்மேல் வைத்து உரைத்தலும், அதனைத், தன்மேல் வைத்துச் சாற்றலும்,பாங்கி தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும், தலைமகன் தன்னைத் தானே புகழ்தலும். அலர்முலைப் பாங்கி அருள் இயல் கிளத்தலும், கொண்டு நிலை கூறலும், என்று இவை ஏழும் மடல் கூற்றிற்கும் , மடல் விலக்கிற்கும், கடவ என்மனார் கற்று அறிந்தோரே. |
|
உரை
|
|
|
|
|
குறை நேர்தலும், மடல் கூற்று ஒழிதலும். |
146.
| தலைவி இளமைத் தன்மை பாங்கி தலைவற்கு உணர்த்தலும் , தலைவன் தலைவி வருத்திய வண்ணம் உரைத்தலும் , பாங்கி செவ்வி அருமை செப்பலும் தலைவன் செவ்வி எளிமை செப்பலும், பாங்கி என்னை மறைப்பின் எளிது என நகுதலும், அந் நகை பொறா அது அவன் புலம்பலும் , அவள் தேற்றலும் , கையுறை ஏற்றலும் கிழவோன் ஆற்றலும் ,என்னும் அவ் ஒன்பானும் குறை நேர்தற்கும் , மடல் கூற்று ஒழிதற்கும் , முறைமையின் உரிய முன்னும் காலே. |
|
உரை
|
|
|
|
|
குறை நயப்பித்தலும் ,மறுத்தலும் |
147.
| இறைவன் தனக்குக் குறை நேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் ,இறைவி அறியாள் போன்று குறியாள் கூறலும், பாங்கி இறையோன் கண்டமை பகர்தலும், பாங்கியைத் தலைவி மறைத்தலும் ,பாங்கி என்னை மறைப்பது என் எனத் தழா அலும், கையுறை புகழ்வும், என்று இவ் இரு --மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும், வலிதாகச் சொல்லி மறுத்தற்கும் உரிய. |
|
உரை
|
|
|
|
|
குறை நயப்பித்தலும் நயத்தலும் |
148.
| தோழி கிழவோன் துயர் நிலை கிளத்தலும், மறுத்தற்கு அருமை மாட்டலும் , தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும், தலைவியை முனிதலும், தலைவி பாங்கி தன்னை முனிதலும் , தன் கைக் கையுறை ஏற்றலும் , என முறை சாற்றிய ஆறும் வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும், மெலிதாகச் சொல்லி மேவற்கும் , உரிய. |
|
உரை
|
|
|
|
|
கூட்டல் , கூடல் ,ஆயம் கூட்டல் , வேட்டல் |
149.
| இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தலும் ,குறியிடம் கூறலும், குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறலும், குறியிடத்து உய்த்து நீங்கலும் , இறையோன் இடத்து எதிர்ப்படுதலும் ,இயைதலும், புகழ்தலும், விடுத்தலும் , பாங்கி மெல்லியல் சார்ந்து கையுறை காட்டலும் , மை உறை கண்ணியைப் பாங்கின் கூட்டலும் , நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றலும், உலகியல் மேம்பட. விருந்து விலக்கலும் , பெருந்தகை விருந்திறை விரும்பலும் , எனத் தெரிந்த பன்மூன்றும் கூட்டல் , முதலா, வேட்டல் ஈறாப் பாங்கிக்கு வகுத்த நான்கிற்கும் உரிய. |
|
உரை
|
|
|
|
|
பாங்கியின் கூட்டத்து விரி |
150.
| அற்றம் இல் சிறப்பின் இவ் அறுபத்தொன்றும் குற்றம் இல் பாங்கியின் கூட்டத்து விரியே. |
|
உரை
|
|
|
|