பகற்குறி
 
151. கூட்டல் , கூடல் , பாங்கின் கூட்டல்,
வேட்டல் , என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி.
உரை
   
152. குறியிடம் கூறல் முதலாப் , பெறல் அரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் , பொருந்தப்
பகர்ந்த பன்னிரண்டும் பகற்குறி விரியே.
உரை
   
ஒரு சார் பகற்குறி
153. இரங்கல் , வன்புறை , இற்செறிப்பு உணர்த்தல் , என்று
ஒருங்கிய மூ வகைத்து ஒரு சார் பகற்குறி.
உரை
   
154. கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்
பொழுது கண்டு இரங்கலும் , பாங்கி புலம்பலும் ,
தலைவன் நீடத் தலைவி வருந்தலும்,
தலைவியைப் பாங்கி கழறலும் , தலைவி
முன்னிலைப் புறமொழி மொழிதலும் , இன்னுயிர்ப்
பாங்கியொடு பகர்தலும் , பாங்கி அச்சுறுத்தலும் ,
நீங்கற்கு அருமை தலைவி நினைத்து இரங்கலும்
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும்,
முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுதலும்,
முன் நின்று உண்ர்த்தலும் ,முன் நின்று உணர்த்தி
ஓம்படை சாற்றலும் , மேம்படு கிழவோன்
தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்,
என்ற ஈர்-ஏழும் எல்லுக்குறி விரியே.
உரை