பகற்குறி இடையீடு
 
155. விலக்கல் , சேறல் , கலக்கம் , என்று ஆங்கு
இகப்பு இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு.
உரை
   
156. இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
இறைவியைக் குறிவரல் விலக்கலும் , இறைமகள்
ஆடு இடம் நோக்கி அழிதலும், பாங்கி
ஆடு இடம் விடுத்துக் கொண்டு அகறலும் , பின் நாள்
நெடுந்தகை குறிவயின் நீடு சென்று இரங்கலும்,
வறும் களம் நாடி மறுகலும் , குறிந்தொடி
வாழும் ஊர் நோக்கி மதி மயங்கலும் , எனும்
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே.
உரை