இரவுக்குறி
 
157. வேண்டல் , மறுத்தல், உடன்படல், கூட்டல்,
கூடல் , பாராட்டல் , பாங்கின் கூட்டல்,
உயங்கல் நீங்கல் ,என்று ஒன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறியே.
உரை
   
158. இறையோன் இருட்குறி வேண்டலும் , பாங்கி
நெறியினது அருமை கூறலும் , இறையோன்
நெறியினது எளிமை கூறலும், பாங்கி
அவன் நாட்டு அணி இயல் வினாதலும் , கிழவோன்
அவள் நாட்டு அணி இயல் வினாதலும் , அவற்குத்
தன் நாட்டு அணி இயல் பாங்கி சாற்றலும்,
இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தலும்,
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும்,
நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும்,
குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும்,
இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தலும்,
அவட்கொண்டு சேறலும் ,குறி உய்த்து அகறலும்,
வண்டு உறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும்,
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும்,
புரவலன் தேற்றலும் ,புணர்தலும் ,புகழ்தலும்,
இறைமகள் இறைவனைக் குறி விலக்கலும் , அவன்
இறைவியை இல்வயின் விடுத்தலும் , இறைவியை
எய்திப் பாங்கி கையுறை காட்டலும் ,
இற்கொண்டு ஏகலும் , பின் சென்று இறைவனை
வரவு விலக்கலும், பெருமகன் மயங்கலும் ,
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும்,
திருமகள் புணர்ந்து அவன் சேறலும் , என்று ஆங்கு
இருபத்தேழும் இரவுக்குறி விரியே.
உரை