இரவுக்குறி இடையீடு
 
159. அல்லகுறி , வரும் தொழிற்கு அருமை , என்று ஆங்கு
எல்லிக்குறி இடையீடு இரு வகைத்து ஆகும் .
உரை
   
அல்லகுறி
160. இறைவிக்கு இகுளை இறை வரவு உணர்த்துழித்
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும் ,
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும்,
புலந்து அவன் போதலும், புலர்ந்தபின் வறும் களம்
தலைவி கண்டு இரங்கலும், தன் துணைக்கு உரைத்தலும்
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்,
இறைவன்மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும்,
இறைவி மேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும்
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும்,
அவன் மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும்,
என் பிழைப்பு அன்று என்று இறைவி நோதலும், என
ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்கு உரிய.
உரை
   
வரும் தொழிற்கு அருமை
161. தாயும், நாயும், ஊரும் துஞ்சாமை;
காவலர்க் கடுகுதல், நிலவு வெளிப்படுதல்,
கூகை குழறுதல், கோழி குரல் காட்டுதல்,
ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன்
வரும் தொழிற்கு அருமைக்குப் பொருந்துதல் உரிய.
உரை
   
இரவுக்குறி இடையீட்டின் விரி
162. திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று
இரட்டியும், இரவுக்குறி இடையீட்டு விரியே.
உரை