வரைதல் வேட்கை
 
163. அச்சம், உவத்தல், ஆற்றாமை, என
மெச்சிய வரைதல் வேட்கை மூ வகைத்தே.
உரை
   
164. பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அரு மறை செவிலி அறிந்தமை கூறலும்,
தலைமகன் வரும் தொழிற்கு அருமை சாற்றலும்,
தலைமகன் ஊர்க்குச் செல ஒருப்படுதலும்,
பாங்கி இறைவனைப் பழித்தலும், பூங்கொடி
இறையோன் தன்னை நேர்ந்து இயற்பட மொழிதலும்
கனவு நலிபு உரைத்தலும், கவின் அழிவு உரைத்தலும்,
தன் துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும்,
துன்புறல் பாங்கி சொல் எனச் சொல்லலும்,
அலர் பார்த்து உற்ற அச்சக் கிளவியும்,
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவியும்,
காமம் மிக்க கழிபடர் கிளவியும்,
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்,
நெறி விலக்குவித்தலும், குறி விலக்குவித்தலும்,
வெறி விலக்குவித்தலும், பிற விலக்குவித்தலும்,
குரவரை வரைவு எதிர் கொள்ளுவித்தலும், என
உரை பெற வகுத்த ஒன்பதிற்று இரட்டியும்
வரைதல் வேட்கை விரி எனப்படுமே.
உரை