166.
| வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும், அலர் அறிவுறுத்தலும், தாய் அறிவு உணர்த்தலும், வெறி அச்சுறுத்தலும், பிறர் வரைவு உணர்த்தலும், வரைவு எதிர்வு உணர்த்தலும், வரையும் நாள் உணர்த்தலும், அறிவு அறிவுறுத்தலும், குறி பெயர்த்திடுதலும், பகல் வருவானை இரவு வருக என்றலும், இரவு வருவானைப் பகல் வருக என்றலும், பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும், பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும், உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறலும், ஆறு பார்த்து உற்ற அச்சம் கூறலும், ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறலும், காவல் மிக உரைத்தலும், காமம் மிக உரைத்தலும், கனவு நலிபு உரைத்தலும், கவின் அழிவு உரைத்தலும், என முறை நாடி இயம்பிய இருபதும் வரைவு கடாதல் விரி எனப்படுமே. |