ஒருவழித் தணத்தல்
 
167. செலவு அறிவுறுத்தல், செலவு உடன்படாமை,
செலவு உடன் படுத்தல், செலவு உடன்படுதல்,
சென்றுழிக் கலங்கல், தேற்றி ஆற்றுவித்தல்,
வந்துழி நொந்து உரை, என்று எழு வகைத்தே
ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல்.
உரை
   
168. தன் பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்
மென்சொல் பாங்கி விலக்கலும், தலைவன்
நீங்கல் வேண்டலும், பாங்கி விடுத்தலும்,
தலைவிக்கு அவன் செலவு உணர்த்தலும், தலைவி
நெஞ்சொடு புலத்தலும், சென்றோன் நீடலின்
காமம் மிக்க கழிபடர் கிளவியும்,
கோற்றொடிப் பாங்கி ஆற்றுவித்தலும், அவன்
வந்தமை உணர்த்தலும், வந்தோன் தன்னொடு
நொந்து வினாதலும், வெந்திறல் வேலோன்
பாங்கியொடு நொந்து வினாதலும், பாங்கி
இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை
கூறலும், என்னும் ஆறு-இரு கிளவியும்
ஒருவழித் தணத்தலின் விரி எனப்படுமே.
உரை