170.
| என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றலும், நின் பொருள் பிரிவு உரை நீ அவட்கு என்றலும், நீடேன் என்று அவன் நீங்கலும், பாங்கி ஓடு அரிக் கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும், பூங்குழை இரங்கலும், பாங்கி கொடுஞ்சொல் சொல்லலும், தலைவி கொடுஞ்சொல் சொல்லலும், வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தலும், பருவம் கண்டு பெருமகள் புலம்பலும், இகுளை வம்பு என்றலும், இறைமகள் மறுத்தலும், அவர் தூதாகி வந்து அடைந்தது இப் பொழுது எனத் துணைவி சாற்றலும், பிணைவிழி ஆற்றலும், அவன் அவண் புலம்பலும், அவன் வரும்காலைப் பாகன் தன்னொடும் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லலும் ,பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தலும் வலம்புரி கிழத்தி வாழ்த்தலும், வந்துழி நினைத்தமை வினாதலும், நினைந்தமை செப்பலும், அனைத்தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை பாங்கி கூறலும், என ஆங்கு எழு-மூன்றும் வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிவின் விரி என விளம்பினர் தெரிமொழிப் புலவர். |