வரைவு மலிதல்
 
173. வரைவு முயல்வு உணர்த்தல், வரைவு எதிர்வு உணர்த்தல்,
வரைவு அறிந்து மகிழ்தல், பராவல் கண்டு உவத்தல்; என்று
ஒரு-நால் வகைத்தே வரைவு மலிதல்.
உரை
   
174. காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
காதலிக்கு உணர்த்தலும், காதலி நற்றாய்
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும், பாங்கி
தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும்,
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும்,
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும், தலைவி
மணப் பொருட்டாக அணங்கைப் பராநிலை
காட்டலும், கண்டோன் மகிழ்வும்; என்று ஈட்டிய
இரு-மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம்
விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே.
உரை