அறத்தொடு நிற்றல்
 
175. முன்னிலை, முன்னிலைப் புறமொழி, என்று ஆங்கு
அன்ன இரு வகைத்து அறத்தொடு நிலையே.
உரை
   
176. கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
கலுழ்தல் காரணம் கூறலும், தலைவன்
தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
எய்தக் கூறலும், இகந்தமை இயம்பலும்,
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும்,
தெய்வம் பொறை கொளச் செல்குவம் என்றலும்,
இல்வயின் செறித்தமை சொல்லலும், செவிலி
கனை இருள் அவன் வரக் கண்டமை கூறலும்,
என முறை இயம்பிய ஏழும் புனையிழைத்
தலைவி அறத்தொடுநிலை தனக்கு உரிய.
உரை
   
177. எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்,
வெறி விலக்கியவழி வினாவினும், பாங்கி
பூவே, புனலே, களிறே, என்று இவை
ஏதுவாகத் தலைப்பாடு இயம்பும்.
உரை
   
178. மின்னிடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி
முன்னிலை மொழியால் மொழியும் செவிலி.
உரை
   
179. என்று உடன் இயம்பிய எல்லாம் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே.
உரை
   
180. போக்கே, கற்பொடு புணர்ந்த கவ்வை,
மீட்சி, என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படைக் கிளவி வெளிப்படும் தொகையே.
உரை