உடன்போக்கு
 
181. போக்கு அறிவுறுத்தல், போக்கு உடன்படாமை,
போக்கு உடன்படுத்தல், போக்கு உடன்படுதல்,
போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல்; என்று
யாப்பு அமை உடன்போக்கு இரு-நான்கு வகைத்தே.
உரை
   
182. பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்,
ஆங்கு அவன் மறுத்தலும், அவள் உடன்படுத்தலும்,
தலைவன் போக்கு உடன்படுதலும், பாங்கி
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும், தலைவி
நாண் அழிபு இரங்கலும், கற்பு மேம்பாடு
பூண்முலைப் பாங்கி புகறலும், தலைவி
ஒருப்பட்டு எழுதலும், விருப்புடைப் பாங்கி
சுரத்து இயல் உரைத்துழிச் சொல்லலும், பாங்கி
கையடை கொடுத்தலும், வைகு இருள் விடுத்தலும்,
அவன் சுரத்து உய்த்தலும், அசைவு அறிந்து இருத்தலும்,
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும்,
கண்டோர் அயிர்த்தலும், காதலின் விலக்கலும்,
தன் பதி அணிமை சாற்றலும், தலைவன்
தன் பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்;
என்று இவை ஒன்பதிற்று- இரு வகைக் கிளவியும்
ஒன்றிய அன்பின் உடன்போக்கு விரியே.
உரை