கற்பொடு புணர்ந்த கவ்வை
 
183. செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல்,
கவர் மனை மருட்சி, கண்டோர் இரக்கம்,
செவிலி பின் தேடிச் சேறல்; என்று ஆங்குக்
கற்பொடு புணர்ந்த கௌவை ஐ வகைத்தே.
உரை
   
செவிலி புலம்பல்
184. வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இனையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதலும்,
தன் அறிவின்மை தன்னை நொந்து உரைத்தலும்,
தெய்வம் வாழ்த்தலும்; இவ் ஒரு மூன்றும்
இலங்கிழைச் செவிலி புலம்புதற்கு உரிய.
உரை
   
நற்றாய் புலம்பல்
185. செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில்
பாங்கி தன்னொடும், பாங்கியர் தம்மொடும்,
அயலார் தம்மொடும், பயில் இடம் தமமொடும்,
தாங்கலள் ஆகிச் சாற்றிய எல்லாம்,
பூங்கொடி நற்றாய் புலம்பற்கு உரிய.
உரை
   
அனை மருட்சி
186. நிமித்தம் போற்றலும், சுரம் தணிவித்தலும்,
தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்,
இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும்,
அச்சத் தன்மைக்கு அச்சம் உற்று இரங்கலும்,
என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய.
உரை
   
கண்டோர் இரங்கல்
187. ஆயமும், தாயும், அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம்.
உரை
   
செவிலி பின்தேடிச் செல்லல்
188. ஆற்றாத் தாயைத் தேற்றலும், ஆற்றிடை
முக்கோல் பகவரை வினாதலும், மிக்கோர்
ஏதுக் காட்டலும், எயிற்றியொடு புலம்பலும்,
குரவொடு புலம்பலும், சுவடு கண்டு இரங்கலும்,
கலந்து உடன் வருவோர்க் கண்டு கேட்டலும், அவர்
புலம்பல் தேற்றலும், புதல்வியைக் காணாது
கவலை கூர்தலும்; என இவை ஒன்பானும்
செவிலி பின் தேடிச் சேறற்கு உரிய.
உரை
   
189. முற்பட மொழிந்த முறை எழு-மூன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே.
உரை