மீட்சி
 
190. தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல், என
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே.
உரை
   
191. தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தலும்,
தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றலும்,
தலைவி முன் செல்வோர் தம்மொடு தான் வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் , ஆங்கு அவர்
பாங்கியர்க்கு உணர்த்தலும் ,ஆங்கு அவர் கேட்டு
நற்றாய்க்கு உணர்த்தலும் ,நற்றாய்க் கேட்டு அவன்
உளம் கொள் வேலனை வினாதலும் ; என உடன்
விளம்பு இரு-மூன்றும் மீட்சியின் விரியே.
உரை
   
192. மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும்,
அவள் மனை வரைதற்கும் , தன் மனை வரைதற்கும்,
இவை ஐந்து உரிய செவிலி கூற்று ஒழித்தே .
உரை