தன்மனை வரைதல்
 
193. வினாதல் , செப்பல் , மேவல் ; என்று இறைவன்
தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே.
உரை
   
194. பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின்
செவிலியை வினாதலும் ,செவிலிக்கு இகுளை
வரைந்தமை உணர்த்தலும் , வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும்
தலைவி இல் வந்துழித் தலைவன் பாங்கிக்கு
யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்று என்றலும் ,
தான் அது முன்னே சாற்றியது உரைத்தலும் ;
என்னும் இவ் ஐந்தும் இன்னிலை வேலோன்
மன்னிய தன்மனை வரைதலின் விரியே.
உரை
   
195. ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு
நீதியின் உரிய நினையும் காலை.
உரை
   
196. இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒரு வகை மீண்டு வரைதலின் விரியே.
உரை