உடன்போக் கிடையீடு
 
197. போக்கு அறிவுறுத்தல் ,வரவு அறிவுறுத்தல்,
நீக்கம் ,இரக்கமொடு மீட்சி ; என்று ஆங்கு
உடன்போக்கு இடையீடு ஒரு நால் வகைத்தே.
உரை
   
198. நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் ,தலைமகள்
தன் செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தலும்,
ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் , ஈன்றாள்
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத்
தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தலும்,
தலைமகள் தன்னைத் தலைமகன் விடுத்தலும்,
தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கிக்
கவன்று ஆற்றலும் ; என நுவன்றவை ஆறும்
உடன்போக்கு இடையீட்டு விரி ஆகும்மே.
உரை