கற்பு இயல்
 
கற்பின் இலக்கணம்
200. பொற்பு அமை சிறப்பின் கற்பு எனப்படுவது
மகிழ்வும் , ஊடலும் , ஊடல் உணர்த்தலும்,
பிரிவும் , பிறவும் மருவியது ஆகும்.
உரை
   
கற்பிற்கு உரிய கிளவித் தொகை
201. இல்வாழ்க்கையே , பரத்தையின் பிரிவே,
ஒதல் பிரிவே , காவல் பிரிவே,
தூதின் பிரிவே , துணைவயின் பிரிவே,
பொருள்வயின் பிரிவு ; எனப் பொருந்திய ஏழும்
வளம் மலி கற்பின் கிளவித் தொகையே.
உரை