பரத்தையிற் பிரிவு
 
204. வாயில் வேண்டல் , வாயில் மறுத்தல்,
வாயில் நேர்வித்தல் , வாயில் நேர்தல் ; என்று
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே.
உரை
   
உணர்த்த உணரும் ஊடல்
205. காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும்,
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும்,
ஈங்கு இது என் எனப் பாங்கி வினாதலும்,
இறைமகன் புறத்து ஒழுக்கு இறைமகள் உணர்த்தலும்,
தலைவியைப் பாங்கி கழறலும் ,தலைவி
செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறலும்,
பரத்தையர் கண்டு பழித்தலும் , பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன்
வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதலும்,
வரவு உணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்,
முதிரா மென்முலை எதிர்கொண்டு பணிதலும்,
புணர்ச்சியின் மகிழ்வும் ; என்று உரைத்த பன்னொன்றும்,
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய.
உரை
   
உணர்த்த உணரா ஊடல்
206. வெள்ளணி அணிந்து விடுத்துழிப் புள் அணி
மலை வேல் அண்ணல் வாயில் வேண்டலும்,
தலைவி நெய் ஆடியது இகுளை சாற்றலும்,
தலைவன் தன் மனத்து உவகை கூறலும்,
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும்,
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்,
பாணன் முதலாப் பாங்கன் ஈறாய்
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
மறுத்தலும் , விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு
இறையோன் மகிழ்தலும், இறைமகள் விருந்து கண்டு
ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
சீறேல் என்று அவள் சேவடி தொழலும் , இஃது
எங்கையர் காணின் நன்று அன்று என்றலும்,
அங்கு அவர் யாரையும் அறியேன் என்றலும்,
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்,
தாமக் குழலியைப் பாங்கி தணித்தலும்,
தணியாள் ஆகத் தலைமகன் ஊடலும்,
அணிவளைப் பாங்கி அன்பிலை கொடியை என்று
இணர்த்தார் மார்பனை இகழ்தலும் ; பிறவும்
உணர்த்த உணரா ஊடற்கு உரிய.
உரை
   
207. ஆயிழை மைந்தனும் , ஆற்றாமையும்
வாயிலாக வரவு எதிர் கோடலும்,
மணந்து அவன் போயபின் வந்த பாங்கியோடு
இணங்கிய மைந்தனை இனிதினில் புகழ்தலும்,
தலைவனைப் புகழ்தலும் , சிலைநுதல் பாங்கி
மனைவியைப் புகழ்தலும் ; இனையவை பிறவும்
அனைவகை மொழிந்த அதன்பால் படுமே.
உரை
   
பரத்தையின் பிரிவின் விரி
208. மூன்று சூத்திரத்தும் மொழிந்தவை எல்லாம்
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே.
உரை
   
மற்ற பிரிவுகள்
209. பிரிவு அறிவுறுத்தல் , பிரிவு உடன்படாமை,
பிரிவு உடன்படுத்தல் , பிரிவு உடன்படுதல்,
பிரிவுழிக் கலங்கல் , வன்புறை , வன்பொறை,
வருவழிக் கலங்கல் , வந்துழி மகிழ்ச்சி ; என்று
ஒருமையில் கூறிய ஒன்பது வகைய
கல்வி முதலா எல்லாப் பிரிவும்.
உரை