| தொடக்கம் |
கூற்று
|
|
|
|
| களவில் கூற்றிற்கு உரியர் | |
213.
| தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி, என்று ஈங்கு இவ் அறுவரும் சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர். |
|
உரை
|
| |
|
|
|
| கற்பில் கூற்றிற்கு உரியவர் | |
214.
| நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தையர், அறிவர், என்று எழுவரும்; அறுவர் என்று அவரும்; ஆகிய அனைவரும் குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர். |
|
உரை
|
| |
|
|
|
| கூற்றிற்கு உரிமை இல்லாதார் | |
215.
| பயந்தோன், தன் ஐ, உயங்கு நோய் அறிவோர், ஊரவர், அயலோர், சேரியோர், என்று இவர் முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே. |
|
உரை
|
| |
|
|
|
| தலைவன் கூற்றிற்கு ஒரு சிற்ப்பு விதி | |
216.
| தமர் வரின் இடைச்சுரம் தன்னில் கிழத்தியோடு அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும். |
|
உரை
|
| |
|
|
|
| தலைவி கூற்றிற்கு ஒரு சிறப்பு விதி | |
217.
| உடன் போய் மீண்ட கொடுங்குழை மடந்தை பிரிவுழித் தலைவனொடு சுரத்து இயல் பேசலும், பிரிந்துழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச் சொல்லலும், உரியள் சொல்லும் காலை. |
|
உரை
|
| |
|
|
|
| நற்றாய் கூற்று நிகழாத இடம் | |
218.
| தலைவன், தலைவியொடு நற்றாய் கூறாள். |
|
உரை
|
| |
|
|
|
| நற்றாய் கூற்று நிகழும் இடம் | |
219.
| புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர் அந்தணர், தெய்வம், அயலோர், அறிவர், சிந்தைநோய் அறிவோர், செவிலி, பாங்கியொடு, கண்டோர்க்கு, உரைக்கும் பண்புடை நற்றாய். |
|
உரை
|
| |
|
|
|
| செவிலி கூற்று நிகழும் இடம் | |
220.
| தாயொடும், பாங்கிதான், முதலாரொடும் சேயிழை செவிலியும் செப்பும் ஆங்கே. |
|
உரை
|
| |
|
|
|
| கண்டோர் கூற்று நிகழும் இடம் | |
221.
| தாயர் , பாங்கியர் , தலைவன் ,தலைவியோடு ஏயும் என்ப கண்டோர் கூற்றே. |
|
உரை
|
| |
|
|
|
| பிறர் கூற்று | |
222.
| சாற்றா எழுவரும் தலைவன் , தலைவியோடு ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும் |
|
உரை
|
| |
|
|
|
| தலைவி கூற்றிற்குப் புறனடை | |
223.
| நெஞ்சும் , நாணும் , நிறைசேர் அறிவும், செஞ்சுடர்ப் பருதியும் , திங்களும் மாலையும், புள்ளும் , மாவும் , புணரியும் , கானலும், உள்ளுறுத்து இயன்றவும் ,மொழிந்தவை பிறவும் ; தன் சொல் கேட்குந போலவும் , தனக்கு அவை இன்சொல் சொல்லுந போலவும் , ஏவல் செய்குந போலவும் , தேற்றுந போலவும், மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும். |
|
உரை
|
| |
|
|
|
| எல்லாக் கூற்றிற்கும் புறனடை | |
224.
| இறையோன் முதலோர் யாரொடும் இன்றித் தம்மொடு தாமே சாற்றியும் அமைப. |
|
உரை
|
| |
|
|