243.
| அகன்றுழிக் கலங்கலும் , புகன்ற மடல் கூற்றும், குறி இடையீடும் , தெளிவிடை விலங்கலும், வெறிகோள் வகையும் , விழைந்து உடன்போக்கும், பூப்பு இயல் உரைத்தலும் , பொய்ச்சூள் உரையும், தீர்ப்பு இல் ஊடலும், போக்கு அழுங்கு இயல்பும், பாசறைப் புலம்பலும் , பருவம் மாறுபடுதலும், வன்பொறை எதிர்ந்து மொழிதலும் ,அன்பு உறு மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும், பிறவும் , அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய. |