அகப்பாட்டினுள் பாடப்படுவோர்
 
245. பாட்டுடைத் தலைவன் , கிளவித் தலைவன் , எனப்
பாட்டினுள் பாடப்படுவோர் இருவர்.
உரை
   
246. அவருள்,
உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆகும்.
உரை
   
பாட்டுடைத் தலைவன் பெயர்கள்
247. நிலப்பெயர் ,வினைப்பெயர் , பண்புகொள் பெயரோடு,
குலப்பெயர் , இயற்பெயர் , கூறுப அவர்க்கே.
உரை
   
248. அவற்றுள்,
இயற்பெயர் கிளவித் தலைவற்கு இசையார்.
உரை
   
அகப்பாட்டினுள் தலைமக்கள்
249. இருவரும் ஒருங்கே வருதலும் , தனித்தனி
வருதலும் ,இருவரும் வாராது ஒழிதலும்,
உரிய என்மனார் உணர்ந்திசினோரே.
உரை