பக்கம் எண் :

10 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


படைக்கலம் வழங்கக் கற்றுக்கோடலும் யானைஏற்றம்குதிரையேற்றம்
போல்வனவும் எல்லாருக்கும் உரிய என்பது.


....


67

அறப்புறம்காவலும் நாடுகாவலும் எனக் காவற் பிரிவு இருவகைப்படும்
என்பது.


....


68

அறப்புறம்காவல் நான்கு வருணத்தாருக்கும் உரித்து என்பது.

....

69

நாடுகாவற்பிரிவு அரசர்க்கே சிறப்பாக உரியது என்பது.

....

70

அந்தணரும் அரசரும் தூதிற் பிரிவர் என்பது.

....

71

அரசரால் சிறப்புப்பெயர் பெறின் வணிகரும் வேளாளரும் நாடுகாவற்
பிரிவும் தூதிற் பிரிவும் கோடற்கு உரியராம் என்பது.


....


72

பகைவயின் பிரிவு அந்தணர் அல்லாத மூவருக்கும் உரியது என்பது.

....

73

பரத்தையின் பிரிவும் பொருள்வயின் பிரிவும் நான்கு வருணத்தாருக்கும்
உரிய என்பது.


....


74

ஐந்துநிலத் தலைமக்களுக்கும் பரத்தையிற்பிரிவு, பகைவயின் பிரிவு,
பொருள்வயின் பிரிவு என்ற மூன்றும் உரியவாம் என்பது.


....


75

ஓதற்பிரிவு முதலிய ஐந்தன்கண்ணும் தலைவன் தலைவியிடம் சொல்லிச்
செல்லுதலும் உண்டு, சொல்லாது செல்லுதலும் உண்டு என்பது.


....


76

தலைவியிடம் கூறாவிடினும் பாங்கியிடம் கூறியே செல்வான் என்பது.

....

77