பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                11


 

 தோழி தலைவிக்குப் பிரிவினைக் குறிப்பாகத் தெரிவிப்பாள் என்பது.

....

78

 பிரிவுகளின்போது நடந்தும், கப்பலிலும் வண்டிகளிலும் ஊர்ந்தும்
  பிரயாணம் செய்வர் என்பது.


....


79

 அந்தணர்கள் கப்பல்பிரயாணம் செய்தல் கூடாது என்பது.

....

80

 ஏனைய மூன்று வருணத்தாரும் குலமகளிரை அழைத்துக் கொண்டு
  கப்பலில் சேர்தலும், பாசறைக்குச் சேர்தலும் கூடா என்பது.


....


81

 ஓதல் முதலிய ஐவகைப் பிரிவும் தொடங்கும் தலைவன் போதலும்
  மனம் வருந்தித் தங்குதலும் உடையன் என்பது.


....


82

 தலைவன் இல்லத்து வருந்துதலும், பிரிவின்இடையே இடைச்சுரத்து
  வருந்துதலும் உடையன் என்பது.


....


83

 தலைவியையும் தன்மனத்தையும் தேற்றுவதற்குத் தலைவன்
  வருந்துவானே அன்றித் தன் பிரிவை விடுத்து இருப்பவன்
  அல்லன் என்பது.



....



84

 ஓதற்பிரிவின் முடிவுஎல்லை மூன்றுஆண்டுக் காலம் என்பது.

....

85

 தூது, துணை, பொருள் இவைபற்றிய பிரிவுகளின் முடிவு எல்லை
  ஓர்யாண்டுக்காலம் என்பது.


....


86

 தலைவி பூப்பு எய்தி நீராடியபின் தொடர்ந்த பன்னிரு நாள்களும்
  அவள் வயிற்றில் கருத்தரித்தற்கு உரிய காலம் ஆதலின், தலைவன்
  பரத்தையின் பிரிதலை அந்நாள்களில் நிகழ்த்துதல் கூடாது என்பது.



....



87