60 நாழிகை 24 மணியாகவே மணிக்கு 2லு நாழிகையாகச் சிறுபொழுது
ஒவ்வொன்றும் நான்கு நான்கு மணி அளவிற்றாம். மாலை-இரவு 6-10 மணி;
யாமம்-இரவு 10 முதல் 2 மணி; வைகறை-இரவு 2 மணி முதல் 6 மணி;
காலை-6 முதல் 10 மணி; பகல்-10 முதல் 2 மணி; எற்பாடு பிற்பகல் 2 முதல்
6 மணி எனக்கொள்க.
"வைகுறு விடியல்" என்ற தொடருக்கு வைகுறுவும் விடியலும் என்று
பொருள்செய்துகொண்டு, விடியல் என்பதற்குக் காலை என்று பொருள்
கொள்ளுதல் வேண்டும். வைகுறு விடியல் என்பதனை இருபெயரொட்டாக்கி
வைகுறுவாகிய விடியல் என்று பொருள்கொண்டு, இரவின் கடைப்பகுதியைக்
கொண்டார் நம்பிஅகப்பொருள் நூலார். அவர் சிறுபொழுது ஐந்தே எனக்
கொண்டு மாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, பகல் என்று பகுத்தார்;
ஆனால் சிறுபொழுதுகளுக்கு நேரவரையறை குறிப்பிடவில்லை. சிவஞான
முனிவர் இவர் கருத்தையே பின்பற்றிச் சிறுபொழுது ஐந்தனுக்கும்
ஒவ்வொன்றிற்கும் பத்து நாழிகை வகுத்துப் பிற்பகலாகிய இரண்டுமணி முதல்
ஆறுமணிவரை உள்ள நேரத்தைப் பயனற்ற நேரம் என்று தள்ளியதோடு,
"நெய்தலின் உரிப்பொருளாகிய இரக்கத்திற்கு விடியற்காலத்தை அடுத்த
காலைப்பொழுதே ஏற்றது" எனச் சான்றோர் செய்யுட்கள் பலவற்றிற்கும்
மாறுபாடாக உரைத்துள்ள செய்தியைச் சூத்திர விருத்தியில் காண்க. நம்பி
அகப்பொருள் நூலார் முதலியோருக்கு எற்படுகாலை என்பது கதிரவன்
தோன்றும் காலைப்பொழுதாம். தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும்
இவ்வாசிரியருக்கும் எற்பாடு என்பது கதிரவன் சாயத்தொடங்கும் பிற்பகல்
நேரமாம்.
மாலைப்பொழுதும் இடையாமப்பொழுதும் நீங்கும்வரை செறிந்திருந்த
கங்குல் இறுதியில் தங்கியிருக்கும் நேரம்