ஓதற்குப் பிரிந்த தலைவன் இடையே திரும்பி வருதற்கும் தங்கும் இடத்தில் மனம் வருந்துதற்கும் உரியன் அல்லன் என்பது. |
|
|
தூது துணை இவைபற்றிப் பிரிந்தோன், தன்செயல் குறித்தகால வரையறையைக் கடந்து நீட்டிப்பின், பாசறைக்கண் மனம் வெறுத்துப் புலம்புதலும் கூடும் என்பது. |
|
|
தலைவி கற்புக்காலத்தில், பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தல் முதலாகத் தலைவனோடு ஆறும் குளனும் ஆடி விளையாடல் ஈறாகப் பலசெயல்களும் நிகழ்த்துவாள் என்பது. |
|
|
வாயில்வேண்டல் முதலிய எட்டும் பிறவும் பாணற்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
செலவின்தேற்றல் முதலிய நான்கும் பிறவும் விறலிக்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
செல்வம் வாழ்த்தல் முதலிய எட்டும் பிறவும் கூத்தர்க்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
தலைவியை வாயில்வேண்டல் முதலிய பத்தும் பிறவும் இளையர் தொழில்களாம் என்பது. |
|
|
புலவி தீர்த்தலும், தலைவன் வருகையைத் தலைவிக்குக் கூறலும் கண்டோர்க்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
இளமைநிலையாமை எடுத்துரைத்தல் முதலிய மூன்றும் பிறவும் பார்ப்பனப் பாங்கற்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
தலைவனை நல்வழியில் நிலைநிறுத்துதலும், தீயவழியிலிருந்து நீக்குதலும் பிறவும் வேளாளப் பாங்கன் தொழில்களாம் என்பது. |
|
|