தலைவியை வாயில்வேண்டல் முதலிய நான்கும் பிறவும் பாகன் தொழில்களாம் என்பது. |
|
|
பிரிவுழி விலக்கல் முதலிய நான்கும் பிறவும் தோழிக்கு உரிய தொழில்களாம் என்பது. |
|
|
முன்வருநீதி முதலியவற்றை மொழிதலும் பிறவும் செவிலித்தாய்க்கும் அறிவர்க்கும் உரிய தொழில்களாம் என்பது. |
|
|
நற்குல மகளிரை இழித்துப் பேசுதலும், மனைவியைப் பழித்தலும், அவளை இடித்துக்கூறலும், மனைவியருக்கு அமைந்த குணங்களும் காமக்கிழத்தியருக்கு உரிய என்பது. |
|
|
தலைவனையும் தலைவியையும் இகழ்ந்து தம்மைப் புகழ்ந்து பொருளீட்டிச் சேமித்தலே பரத்தையர் தொழில் என்பது. |
|
|
பரத்தையர் காதற்பரத்தையைப் புகழ்ந்து தம்மைத் தாமே ஏசிக்கொள்வதும் உண்டு என்பது. |
|
|
இளையராவார், தலைவனை நீங்காத கவசம்போன்ற மெய்க்காவலர் என்பது. |
|
|
பாங்கர், தலைவனைப் பாதுகாத்தற்கு என்றே இருமுது குரவரால் ஓம்படை சாற்றப்பட்ட நண்பர் என்பது. |
|
|
தோழி, செவிலிமகளாய்த் தலைவிக்கு உசாத்துணையாகி அவள் துன்பம் துடைக்கும் உயிர்த்துணைவி என்பது. |
|
|
செவிலி, நற்றாயின் தோழியாய்த் தலைவியை நன்னெறிக்கண் வளர்த்த தாயாவாள் என்பது. |
|
|
அறிவராவார், தலைவன்தலைவியருக்கு உறுதிப்பொருள் கூறும் மேம்பட்ட குரவராவார் என்பது. |
|
|