காமக்கிழத்தி, ஒருவனிடமே உரிமை பூண்டு வாழ்ந்த பரத்தைமகளாய் தலைவன் மணத்தற்கு உரியள் என்பது. |
|
|
பொருளையே விரும்பும் சேரிப்பரத்தையர் மகளிராய்த் தலைவனால் காதலில் புணரப்படுவோர் காதற்பரத்தையர் என்பது. |
|
|
அவருள்ளும் சிலரைத் தலைவன் வரைந்துகோடலும் உண்டு என்பது. |
|
|
இல்லறத்தைச் செவ்வனே செய்து மக்களொடு மகிழ்ந்து வாழ்ந்து காமவேட்கை தீர்ந்த முதுமையில் தலைவனும் தலைவியும் தம்ஊரை விடுத்துக் காட்டிற்குச் சென்று எல்லையற்ற சுற்றத்தாரோடு துறவறத்தை மேற்கொள்வர் என்பது. |
|
|
களவு ஒழுக்கம் எனப்படுவது பிரமம் முதலிய எண்வகையாக வேதம் கூறும் மணங்களுள் கந்தருவ வழக்கத்தை ஒக்கும் என்பது. |
|
|
காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என்று கைக்கிளை நான்கு வகைப் படும் என்பது. |
|
|
ஊழினது ஆணையானே ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதலே காட்சி; தலைவன் தலைவியைவிட மேம்பட்டவனாய் இருப்பினும் அஃது ஒக்கும் என்பது. |
|
|
தலைவன் தலைவியரிடையே உள்ள ஒப்புமைகள் பிறப்பு முதலிய பத்தும் என்பது. |
|
|
தலைவியின் வடிவத்தையும் அவளைக் கண்ட சூழலையும் நோக்கத் தலைவனுக்கு ஐயம் பிறக்கும் என்பது. |
|
|
எழுதியவல்லி முதலிய பலவும் தலைவன் தலைவியிடத்து அவள் தெய்வமகளோ மானுடமகளோ என்று கொள்ளும் ஐயத்தைப் போக்கும் என்பது. |
|
|