ஆற்றும் இப்பாடலில், தலைவர் பொருட்டு அகல்வர் என்ற பாலை
உரிப்பொருளாகிய பிரிதல் ஒன்றுமே வர, ஏனை முதற்பொருளும்
கருப்பொருளும் வாராமை காண்க.
"திருநகர்" என்ற பாடல்:
"முல்லையே, என் இல்லத்தில் உறையும் குற்றமற்ற கற்பினளாகிய என்
மனைவியின் கூந்தலுடைய மணமும் பற்களின் ஒளியும் நீ பெற்றிருப்பதற்கு
அவளோடு நினக்கு என்ன உறவு உள்ளது?" என்ற இப்பாடலில் பொருள்
வயின் பிரிந்து மீண்டு வந்து இல்லறம் நடத்துவோன், மீண்டும் பொருட்
பிரிவு கருதி அதனினும் தலைவியின் கூட்டமே சிறந்தது என்ற கருத்தில்
அவளைப் புகழும் வாயிலாகப் பேசும் பேச்சில், கற்பின் மாயோள்-முல்லை
என்ற கருப்பொருள்களும், "திருநகர் விளங்கும் மாசில் கற்பு" என இருத்
தலாகிய உரிப்பொருளும் வர, முதற்பொருள் சுட்டப்படாமை காண்க.
"கரந்தை விரைஇய" என்ற பாடல்;
"கரந்தைமாலை சூடி இளையர் தம் ஏவலைக் கேட்கப் பரியைச்
செலுத்தித் தேரொடு சென்று பகைவரை அழித்து நம் காதலர் வினைமுடித்து
மீண்டார்" என்று தோழி தலைவியை ஆற்றுவிக்கும் இப்பாடலில், தலைவர்
வந்தார் என்ற முல்லைத் திணைக்கு உரிய உரிப்பொருள் ஒன்றுமே வர,
முதலும் கருவும் வாராமை காண்க.
"பூங்கொடி மருங்கின்" என்ற பாடல்:
"கொடி இடையாள் ஆகிய பரத்தையின் நட்புத்தொடர் கையினாலே
பாணன் தொடர்ந்து நம்பக்கல் உள்ளான்" என்ற இப்பாடலில், "எங்கை
கேண்மை முன்னும் பின்னுமாகி" என்ற மருதத்தின் உரிப்பொருளாகிய
ஊடல் ஒன்றுமே வர, மருதத்தின் முதற்பொருளும் கருப்பொருளும்
வாராமை காண்க.