பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-21                               155


 

     ஐயுறு நிலைமை அறிய உரைத்தலும்
     மனைவி போல அல்லவை மொழிதலும்
     விழுப்பம் பேசலும் வேண்டா என்றலும்
     பழித்தகவு உணர்த்தலும் பார்த்துஉறவு உரைத்தலும்
     பொருந்தா என்றலும் பொய்யுரை புரிதலும்
     வருந்தும் என்றலும் வடிவிது என்றலும்
     நின்குறை நீயே சென்றுரை என்றலும்
     சீர்மலர்க் கோதைக்குச் செவ்வியன்று என்றலும்
     நீர்மையன்று என்றலும் நீங்குமின் என்றலும்
     மூரல் முறுவலோடு முகம்மலர்ந்து உரைத்தலும்
     இரங்கி மொழிதலும் ஏத்தி மொழிதலும்
     கலங்கி மொழிதலும் கழறி மொழிதலும்
     வள்ளல் தளர்ச்சியும் மடலேற்று மொழிதலும்
     உள்ளம் குளிர்ப்பித்து ஒண்தழை என்றலும்
     நெஞ்சத்து அடங்கிய நின்றுகுறை ஏற்றலும்
     இன்சொல் இரக்கமும் வன்சொலின் மயக்கமும்
     புகழ்தலும் மயங்கி உரைத்தலும்
     கயற்கண் ஏழையைக் கவற்சி தீர்த்தலும்
     பகற்குறி நேர்தலும் அக்குறி உரைத்தலும்
     பகல்இடம் காட்டலும் சொல்பல உரைத்தலும்
     இற்செறிவு உரைத்தலும் வரைவு கடாவலும்
     இரவரவு இசைத்தலும் வரவு விலக்கலும்
     மற்றவள் தளர்ச்சியும் இரவுக்குறி நேர்தலும்
     எய்துகுறி வினவலும் ஏந்திழை மகிழ்வுடன்
     குறியு ரைத்தலும் அதுகேட்டு உணர்த்தலும்
     மெய்க்குறி உரைத்தலும் மிகுதியில் கொண்டலும்
     ஏந்திழை எடுப்பலும் இடப்புறத்து அகற்றலும்
     பூந்தண் சிலம்பன் புணர்ச்சியது குறியும்
     செவிலியது சேறலும் சென்றெதிர் கோடலும்
     கவ்வை பெரிதுஇவண் கண்டுஅறி என்றலும்
     அம்பலும் அலரும் ஆயின என்றலும்
     வம்புஅலர் கோதை வாட்டம் கூறலும்