பக்கம் எண் :

 158                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     காதல் பெயர்பு கார்அன்று இதுஎனத்
     தாதுஅவிழ் கோதை தானே கூறல்
     பருவம் காட்டிப் பிரிவுஒழி என்றல்
     வருவர் நமர்என வாய்மொழி வலித்தல்
     அந்தியும் ஆம்பலும் மாலையும் மணியும்
     தென்றலும் திங்களும் பிறவும் அன்னவை
     புகன்றுஅற ஆற்றாள் அகன்று அவண்மொழீதல்
     என்குறை இதுஎன இரந்துகுறை கூறல்
     பொருள்வயின் நிற்றல் அவ்வயின் நிலையும்
     இயல்வளி முற்றுதல்
     கார்கண்டு உரைத்தல் கனவின் அரற்றல்
     போர்வேல் கண்ணி புலம்பும்என்று இரங்குதல்
     தூது விடுதல் தூதுஎதிர் கோடல்
     போதுஅவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்
     கோஒரூஉ மொழிதல் தேர்அவண் வருதல்
     ஆர்மலி தேரை அமர்ந்து அவன் ஏறல்
     பாகனைக் கடாவுஎனப் பன்மணி நெடுந்தேர்
     வேக நிலைமையின் விரைந்துநனி கடாவுதல்
     இல்லியல் மடந்தையர் இயல்புஉளம் கேட்டல்
     நல்லியல் நெடுங்கொடி நன்னகர் காட்டல்
     இறைவன் சேருதல் எதிர்கொண்டு வணங்குதல்
     பொறைமலி மடந்தையைப் புலவித்தலை அளித்தல்
     பருநாண் நோக்கிப் பயன்கண்டு மொழிதல்
     செருவேல் கண்ணி சேக்கையின் களித்தல்
     முல்லை நல்லியாழ் முறைமையில் கேட்டல்எனச்
     சொல்லிய பிறவும் சொன்னதன் பொருளே.

     மருத நடையியல்

     கருதற்கு அமைந்த கற்றோர் பூண்ட
     மருத நடையது மாண்புஉறக் கூறின்
     விழவு விரும்புதல்